அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், நாசா ஆராய்ச்சி விமானம் ஒன்று அவசரமாக ‘பெல்லி லேண்டிங்’ செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் லேண்டிங் கியர் திறக்க முடியாத நிலையில், இந்த அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹூஸ்டன் நகரத்திற்கு அருகே உள்ள எலிங்டன் விமான நிலையத்தில், இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதாக நாசா தெரிவித்துள்ளது.