அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் பின்னணியில், ஈரான் தற்போது சிக்கலான போரை எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அதற்கான பதில் வருத்தத்திற்குரியதாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி, தனது செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்துள்ளார். மேற்காசியப் பகுதியில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு இஸ்ரேலே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும், தொடர்ந்து அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.