Team India T20 World cup Victory: எம்.எஸ்.தோனி முதல் ரோஹித் சர்மா வரை.. 2 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற கதை!
How Team India won Two T20 World Cup: 2007 முதல் 2024 வரை இந்திய அணி மொத்தம் 52 போட்டிகளில் விளையாடி, 36 போட்டிகளில் வெற்றி பெற்று 15 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், 2007ம் ஆண்டும், 2024ம் ஆண்டும் இந்திய அணி எப்படி டி20 உலகக் கோப்பையை வென்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதுவரை ஒன்பது டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதன்படி, 2026 டி20 உலகக் கோப்பை 10வது சீசனாகும். இந்த டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு தலைமை தாங்க இருக்கிறார். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து உட்பட 3 அணிகள் மட்டுமே 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளன. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், இந்திய அணி (Indian Cricket Team) தற்போது அதிக போட்டிகளில் வென்ற சாதனையைப் படைத்துள்ளது. 2007 முதல் 2024 வரையிலான அனைத்து டி20 உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்றுள்ளது, மொத்தம் 52 போட்டிகளில் விளையாடி, 36 போட்டிகளில் வெற்றி பெற்று 15 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், 2007ம் ஆண்டும், 2024ம் ஆண்டும் இந்திய அணி எப்படி டி20 உலகக் கோப்பையை வென்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: எதிரணிக்கு பயம்! டி20 உலகக் கோப்பையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கப்போகும் 5 வீரர்கள்!




2007 டி20உலகக் கோப்பை:
‘In the air… Sreesanth takes it’#OnThisDay in 2007, India became the inaugural @T20WorldCup champions with a thrilling five-run win over Pakistan in Johannesburg 🇮🇳🏆 pic.twitter.com/ZonOloUXD3
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 24, 2020
2007 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தது. எனவே, இந்தியா வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 2007 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனியை தேர்ந்தெடுத்தது. இருப்பினும், இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாததால், இந்திய இளம் அணி மீது இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை இல்லை.
இருப்பினும், எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய இளம் அணி, லீக் ஸ்டேஜ் போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இறுதிப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கவுதம் கம்பீர் 54 பந்துகளில் 75 ரன்களும், ரோஹித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்களும் எடுத்திருந்தார்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. முன்னதாக, மிஸ்பா-உல்-ஹக் 43 ரன்கள் எடுத்து ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அவர் தனி ஒருவராக பாகிஸ்தானை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார் இதில், மிஸ்பா உல் ஹக்கின் கேட்சை ஸ்ரீசாந்த் பிடித்தது, எந்தவொரு கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்கமுடியாது. இதன்மூலம், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது.
2024 டி20 உலகக் கோப்பை:
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பின்னர், இந்திய அணி நியூயார்க்கில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தொடர்ந்து நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கனடாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது, அதே நேரத்தில் இந்தியா குரூப் ஏ-யில் முதலிடத்தையும் அமெரிக்கா 2-வது இடத்தையும் பிடித்தது
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானையும், 2வது போட்டியில் வங்கதேசத்தையும் வீழ்த்தியது. தொடர்ந்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு மோதியது. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில், இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ALSO READ: விரைவில் டி20 உலகக் கோப்பை.. பரபரப்பை உச்சத்திற்கு கொண்டு போகும் 5 முக்கிய போட்டிகள்!
2வது முறையாக சாம்பியன் பட்டம்:
View this post on Instagram
இறுதிப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம், 11 ஆண்டுகால ஐசிசி கோப்பை வறட்சியை இந்தியா முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்தியா முன்னதாக 2013 இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதே நேரத்தில், இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையையும் வென்றது.