அசாம் மாநிலத்தில் இருந்து வெளியாகியுள்ள மனதை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறிய யானைக் குட்டி ஒன்றின் பிறந்தநாளை, மனிதன் ஒருவர் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வீடியோ, அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. யானைகளின் மீது பெரும் காதல் கொண்ட பிபின் காஷ்யப், தனது வீட்டில் வளர்க்கப்படும் சிறிய யானைக் குட்டியின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார்.