T20 World Cup 2026: வாஷிங்டன் சுந்தருக்காக காத்திருக்கும் இந்திய அணி.. உடற்தகுதி சோதனை எப்போது?
Washington Sundar Fitness Test: இந்திய அணி வருகின்ற 2026 பிப்ரவரி 3ம் தேதி மும்பையில் ஒன்று கூடி பயிற்சி அமர்வுகளை தொடங்கும். இதைத் தொடர்ந்து 2026 பிப்ரவரி 4ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் பயிற்சி போட்டி நடைபெறும். வாஷிங்டன் சுந்தரின் உடற்தகுதி சோதனையும் அதே நாளில் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஓரளவு இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு தெளிவை அளிக்கக்கூடும்.
2026 டி20 உலகக் கோப்பைக்கு (2026 T20 World Cup) முன்னதாக இந்திய அணிக்காக வாஷிங்டன் சுந்தர் விளையாடுவாரா இல்லையா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. காயம் காரணமாக நீண்ட காலமாக வெளியேறியுள்ள ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) குறித்து இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை. 2026 டி20 உலகக் கோப்பையில் வருகின்ற 2026 பிப்ரவரி 7ம் தேதி அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பது குறித்து அடுத்த சுமார் 72 மணி நேரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
ALSO READ: நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.. உலகக் கோப்பைக்கு டவுட்..!




வெளியான தகவல் என்ன..?
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி, வாஷிங்டன் சுந்தர் வருகின்ற 2026 பிப்ரவரி 4ம் தேதி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்-ல் உடற்தகுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். இந்த சோதனையில் வாஷிங்டன் சுந்தர் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முழுமையாகத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்கும். முன்னதாக, கடந்த 2026 ஜனவரி 11ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். அதன்பிறகு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
தேர்வாளர்கள் ஏன் காத்திருக்கிறார்கள்?
டி20 உலகக் கோப்பைக்கான அணி மாற்றங்களுக்கான காலக்கெடு நாளை அதாவது 2026 ஜனவரி 30ம் தேதியே ஆகும். ஆனால் காயம் ஏற்பட்டால் ஐசிசி விதிகள் சில மாற்றங்களை செய்ய அனுமதி வழங்குகிறது. ஒரு வீரர் முழுமையாக உடல் தகுதி பெறவில்லை என்றால், தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு, போட்டியின் போதும் மாற்றங்கள் செய்யப்படலாம். இதன் காரணமாக, தேர்வாளர்கள் அவசரப்படாமல் மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருக்கின்றனர்.
சமீபத்திய நாட்களில் வாஷிங்டன் சுந்தரின் உடற்தகுதி முன்னேற்றம் அடைந்து வருகிறது. மேலும், டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் லேசான பயிற்சியைத் தொடங்கியுள்ளார். நேற்று அதாவது 2026 ஜனவரி 28ம் தேதி பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் வலை பேட்டிங் பயிற்சி செய்தார். இருப்பினும், 2026 ஜனவரி 29ம் தேதியான இன்று நடைபெறவிருந்த முழு பயிற்சிகளில் இருந்து விலகி இருந்தார்.
ALSO READ: எதிரணிக்கு பயம்! டி20 உலகக் கோப்பையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கப்போகும் 5 வீரர்கள்!
உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி எப்போது பயிற்சியை தொடங்கும்?
🚨NO WASHINGTON SUNDER IN T20 WORLD CUP 2026.🚨
– Washington Sundar ruled out from T20 World Cup 2026, Riyan Parag likely to replace them in T20 World Cup.🥶 pic.twitter.com/lGL5izxqDy
— Jesan (@KKRXTRAOFFICIAl) January 28, 2026
இந்திய அணி வருகின்ற 2026 பிப்ரவரி 3ம் தேதி மும்பையில் ஒன்று கூடி பயிற்சி அமர்வுகளை தொடங்கும். இதைத் தொடர்ந்து 2026 பிப்ரவரி 4ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் பயிற்சி போட்டி நடைபெறும். வாஷிங்டன் சுந்தரின் உடற்தகுதி சோதனையும் அதே நாளில் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஓரளவு இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு தெளிவை அளிக்கக்கூடும். ஒருவேளை வாஷிங்டன் சுந்தர் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், தேர்வாளர்கள் மாற்று விருப்பமாக, ரியான் பராக் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.