Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Washington Sundar: நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.. உலகக் கோப்பைக்கு டவுட்..!

India vs New Zealand T20i Series: ஒருநாள் தொடருக்கு பிறகு நியூசிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலக்கப்பட்டுள்ளார். கிரிக்பஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2026 டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பதும் சந்தேகமே, ஏனெனில் அவர் போட்டி தொடங்குவதற்கு முன்பு குணமடைய வாய்ப்பில்லை என்று தெரிவித்தது.

Washington Sundar: நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.. உலகக் கோப்பைக்கு டவுட்..!
வாஷிங்டன் சுந்தர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Jan 2026 11:11 AM IST

2026 டி20 உலகக் கோப்பைக்கு (T20 World Cup 2026) முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்தும், ஒருநாள் போட்டிகளிலிருந்தும் விலக்கப்பட்டுள்ளார். மேலும், 2026 டி20 உலகக் கோப்பையிலும் அவர் பங்கேற்பது சந்தேகமே என்றும் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான நடந்து வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு, வலியுடன் இந்திய அணிக்காக விளையாடினார். முதல் ஒருநாள் போட்டியில், வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) ஐந்து ஓவர்கள் மட்டுமே பந்து வீசி ஸ்டேடியத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேவைப்படும்போது பேட்டிங் செய்ய வந்தாலும், போட்டிக்குப் பிறகு பிசிசிஐ ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார் என்றும், அவருக்குப் பதிலாக ஆயுஷ் படோனி சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் கூறியது.

ALSO READ: போட்டிக்கு நடுவே புறா எச்சம்! இந்தியன் ஓபனில் தொடரும் சர்ச்சை.. போட்டி பாதியில் நிறுத்தம்!

டி20 தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்:


ஒருநாள் தொடருக்கு பிறகு நியூசிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலக்கப்பட்டுள்ளார். கிரிக்பஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, 2026 டி20 உலகக் கோப்பையில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்பதும் சந்தேகமே, ஏனெனில் அவர் போட்டி தொடங்குவதற்கு முன்பு குணமடைய வாய்ப்பில்லை என்று தெரிவித்தது. முன்னதாக, பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில்,”பந்துவீச்சு செய்யும் போது, ​​வாஷிங்டன் சுந்தருக்கு இடது கீழ் விலா எலும்பில் கூர்மையான வலி ஏற்பட்டது. அடுத்தடுத்த ஸ்கேன்களுக்குப் பிறகு, மேலும் மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்திற்கு (CoE) சென்றுள்ளார்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்தியா vs நியூசிலாந்து டி20 தொடர் அட்டவணை:

  • 2026 ஜனவரி 21 – விசிஏ மைதானம், நாக்பூர்
  • 2026 ஜனவரி 23 – எஸ்விஎன்எஸ் மைதானம், ராய்ப்பூர்
  • 2026 ஜனவரி 25 – பர்சபரா ஸ்டேடியம், குவஹாத்தி
  • 2026 ஜனவரி 28 – ஏசிஏ-விடிசிஏ, விசாகப்பட்டினம்
  • 2026 ஜனவரி 31 – கிரீன்ஃபீல்ட் மைதானம், திருவனந்தபுரம்

இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5 டி20 போட்டிகளும் மாலை 7 மணிக்கு தொடங்கும். 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி எப்படி கட்டமைக்கப்படும் என்றும், டி20 தொடரில் வாஷிங்டனுக்குப் பதிலாக யார் களமிறங்குவார்கள் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ALSO READ: பிபிஎல்-ஐ புறக்கணித்த வீரர்கள்.. வங்கதேசத்தில் நிலவும் குழப்பம்.. பதவி விலகுவாரா பிசிபி தலைவர்?

டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா , ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, இஷான் கிஷன்.