Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Indian Open Badminton 2026: போட்டிக்கு நடுவே புறா எச்சம்! இந்தியன் ஓபனில் தொடரும் சர்ச்சை.. போட்டி பாதியில் நிறுத்தம்!

Indira Gandhi stadium: 2026 ஜனவரி 15ம் தேதியான இன்று இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் மற்றும் சிங்கப்பூரின் லோ கீன் யூ இடையேயான ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய போட்டி நடைபெற்றது. இந்த முக்கிய போட்டியின்போது புறாக்கள் போட்டிக்கு நடுவே அடிக்கடி எச்சம் கழித்ததால் ஆட்டம் இரண்டு முறை நிறுத்தப்பட்டது.

Indian Open Badminton 2026: போட்டிக்கு நடுவே புறா எச்சம்! இந்தியன் ஓபனில் தொடரும் சர்ச்சை.. போட்டி பாதியில் நிறுத்தம்!
இந்தியன் ஓபnImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jan 2026 19:35 PM IST

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் (Delhi) நடைபெற்று வரும் இந்தியன் ஓபன் 2026 பேட்மிண்டன் போட்டியில் (India Open badminton 2026) ஏற்கனவே பல சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது மற்றொரு சர்ச்சை புதிதாக எழுந்துள்ளது. இன்று அதாவது 2026 ஜனவரி 15ம் தேதி இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் மற்றும் சிங்கப்பூரின் லோ கீன் யூ இடையேயான ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய போட்டி நடைபெற்றது. இந்த முக்கிய போட்டியின்போது புறாக்கள் போட்டிக்கு நடுவே அடிக்கடி எச்சம் கழித்ததால் ஆட்டம் இரண்டு முறை நிறுத்தப்பட்டது. முதல் சுற்றிலும், பின்னர் மூன்றாவது சுற்றிலும் இதே காரணத்தால் போட்டி 16-14 என்ற கணக்கில் நிறுத்தப்பட்டது. முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய பேட்மிண்டன் சங்கம் (பிஏஐ) புறாக்கள் பயிற்சி மைதானங்களில் மட்டுமே இருப்பதாகவும், விளையாடும் பகுதி முற்றிலும் சுத்தமாகவும் புறாக்கள் இல்லாததாகவும் இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இடமாற்ற சர்ச்சைக்கு ஐசிசி முற்றுப்புள்ளி.. இந்தியாவில் விளையாடும் வங்கதேச அணி..!

என்ன நடந்தது..?


டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உட்புற ஸ்டேடியத்தில் இந்திய ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டிக்கு நடுவே புறாவின் எச்சம் விழுந்ததால், நடுவர் ஆட்டத்தை நிறுத்தி சுத்தம் செய்ய உத்தரவிட்டது. தற்போது இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்திய ஓபன் போட்டி தொடங்கியதிலிருந்தே மைதானம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. முன்னதாக, டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் மைதானத்தின் அசுத்தம், பறவைகள் பறக்கின்றன, புறா அச்சம் மைதானத்தில் விழுகிறது. இதனால் தரை அழுக்காக இருப்பதாக கூறினார். முன்னதாக, டெல்லியின் மாசுபாடு குறித்தும் டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்ஃபெல்ட் கருத்து தெரிவித்தார். இதற்கு BAI பொதுச் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா, மைதானத்தைப் பற்றியது அல்ல, மாறாக அவரது தனிப்பட்ட உடல்நலம் பற்றியது என்று கூறினார்.

ALSO READ: பிபிஎல்-ஐ புறக்கணித்த வீரர்கள்.. வங்கதேசத்தில் நிலவும் குழப்பம்.. பதவி விலகுவாரா பிசிபி தலைவர்?

குரங்கு தொல்லை:

டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் போது, ​​மைதானத்தில் குரங்கு ஒன்று தென்பட்டது. இப்போது புறா எச்சம் போட்டி ஏற்பாட்டாளர்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னதாக, டெல்லியின் மாசுபாட்டைக் காரணம் காட்டி டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் ஆண்டன்சன் போட்டியில் இருந்து விலகினார். அப்போது, ஆண்டன்சனுக்கு 5,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தநிலையில், இப்போது இந்திரா காந்தி மைதானத்தில் புறா மற்றும் புறாக்களில் எச்சம் தொடர்பான சர்ச்சை போட்டி ஏற்பாட்டாளர்களிடம் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.