2026 குடியரசு தினவிழா…சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வெளிநாட்டு முக்கியஸ்தர்…யார் அவர்!
2026 Republic Day Celebrations: புது டெல்லியில் ஜனவரி 26- ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் எந்த நாட்டைச் சேர்ந்த முக்கியஸ்தர் பங்கேற்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த நபர் யார், எந்த நாட்டின் முக்கியஸ்தர் என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26- ஆம் தேதி குடியரசு தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணி வகுப்பு மரியாதை, கவச வாகனங்கள் அணிவகுப்பு, ஏவுகணை அமைப்புகள், போர் விமானங்கள், வான்வழி தடுப்பு அமைப்புகள் உள்ளிட்டவை அணிவகுத்து செல்லும். இது இந்தியாவின் ராணுவ வலிமையை தயார் நிலையில் இருப்பதையும், வெளி நாடுகளுக்கு காண்பிப்பதையும் அடிக்கோடிட்டு காண்பிக்கிறது. இந்த நிகழ்வின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள், எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் எதிராக இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கான தயார் நிலையில் இந்தியா உள்ளதை எடுத்து காண்பிக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குடியரசு தின விழாவில் ஏதாவது ஒரு வெளிநாட்டின் அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கமாகும். இது, புது டெல்லியின் ராஜதந்திர முன்னுரிமைகள் மற்றும் கூட்டாளி நாடுகளுடனான உறவுகளை வெளி காண்பிப்பதாகும்.
குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முக்கியஸ்தர்
அதன்படி, இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் எந்த நாட்டை சேர்ந்த அதிபர் பங்கேற்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த விழாவில் புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெற இருக்கும் 77- ஆவது குடியரசு தின அணிவகுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 மூத்த தலைவர்களான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் இந்தியாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளனர்.
மேலும் படிக்க: இந்தியாவில் கடலுக்கடியில் ரயில் நிலையம்…6 நடைமேடைகள்…எங்கு உள்ளது தெரியுமா!




இந்திய குடியரசு தின விழாவில் இதுவே முதன் முறை
இந்தியாவின் குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தலைவர்கள் முதன்மை விருந்தினர்களாக அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவர்களின் இந்த வருகையானது இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு மற்றும் பல தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தலைமை விருந்தினர்களின் பங்கேற்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது பரஸ்பர மரியாதை, இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்தை அங்கீகரிப்பது உள்ளிட்டவற்றை குறிக்கிறது.
யார் இந்த ஐரோப்பிய முக்கியஸ்தர்கள்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் தொடர்ந்தாலும், இந்த அழைப்பு இந்தியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையான ஆழமான கூட்டாண்மையே பிரதிபலிக்கிறது. உர்சுலா வான் டெர் லேயன் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக பணிபுரிந்து வருகிறார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை வழிகாட்டுதல் மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு பொறுப்பு வகித்து வருகிறார். ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக அன்டோனியோ கோஸ்டோ, ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடுகளுக்கு தலைமை வகித்து வருகிறார்.
மேலும் படிக்க: குளிர் அலை அலெர்ட்.. தமிழ்நாட்டில் கடும் குளிர்.. உறைந்து நிற்கும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள்!