Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில் கடலுக்கடியில் ரயில் நிலையம்…6 நடைமேடைகள்…எங்கு உள்ளது தெரியுமா!

Undersea Railway Station: இந்தியாவில் கடலுக்கடியில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளிட்டவை வர உள்ளன. இந்த ரயில் நிலையம் எங்கு அமைக்கப்பட்டு வருகிறது. என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடலுக்கடியில் ரயில் நிலையம்…6 நடைமேடைகள்…எங்கு உள்ளது தெரியுமா!
மாதிரி படம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 13 Jan 2026 11:43 AM IST

இந்தியாவில் கடலுக்கடியில் ரயில் நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையமானது மும்பையின் பாந்த்ரா- குர்லா வளாகத்தில் லட்சிய மும்பை- அகமதாபாத் அதிவேக ரயில் பாதையில் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையமானது தரை மட்டத்திலிருந்து 32.5 மீட்டர் (100 அடிக்கு மேல்) ஆழத்தில் கட்டப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக ஆழமான நிலத்தடி ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. மேலும், இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்காக கடலுக்கு அடியில் சுரங்க பாதைக்கான நுழைவு வாயிலாகவும் இது செயல்பட உள்ளது. மும்பை- அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதையில் உள்ள ஒரே நிலத்தடி ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையமானது அடுத்த ஆண்டு 2027 ஆகஸ்ட் 15=ஆம் தேதி பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

கடலுக்கடியில் அமையும் ரயில் நிலையத்தின் அம்சங்கள்

இந்த ரயில் நிலையத்தில் 2 நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைக்கப்பட உள்ளன. அவை, தோய்பி மெட்ரோ பாதையுடனும், மற்றொன்று எம்டிஎன்எல் கட்டடத்துடனும் இணைக்கப்பட உள்ளது. 1.57 மில்லியன் கன மீட்டர் ஆழத்தில் இந்த ரயில் நிலையம், தளங்கள், ஒரு கூடாரம் மற்றும் ஒரு சேவை தளம் உள்பட மூன்று தளங்கள் அமைக்கப்படும். இங்கு உள்ள 6 நடைமேடைகள் ஒவ்வொன்றும் சுமார் 415 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். மேலும், இந்தியாவின் முதல் மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் ஏறும் இடமாகவும் இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.9 கோடியாக உயர்ந்த சொத்து மதிப்பு…ஐடி நிபுணரின் இமாலய சாதனை!

25-65 மீட்டர் ஆழத்தில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை

மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் பாதையின் 21 கிலோ மீட்டர் தொலைவை சுரங்கப் பாதைகள் வழியாக உள்ளடக்குவதுடன், 7 கிலோ மீட்டர் கடலுக்கு அடியில் உள்ள சுரங்க பாதை வழியாகவும் இருக்கும். இந்த பாதையில், பிகேசி ரயில் நிலையமும் வருகிறது. இந்த புல்லட் ரயில், பிகேசி கடலுக்கடியில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து அரபிக் கடலில் 25-65 மீட்டர் ஆழமுள்ள கடலுக்கடியில் சுரங்கப்பாதையின் வழியாக அகமதாபாத்துக்கு செல்லும்.

மும்பை- அகமதாபாத்தை இணைக்கும் ரயில் பாதை

மும்பை- அகமதாபாத் அதிவேக ரயில் பாதை அல்லது மும்பை- அகமதாபாத் ஹெச்எஸ்ஆர் என்பது கட்டுமான பணியில் உள்ள ஒரு அதிவேக ரயில் பாதை ஆகும். இது மும்பையையும், குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தையும் இணைக்கும். எம்ஏஹெச்எஸ்ஆர் இந்தியாவின் முதல் அதிவேக ரயில் பாதையாக இருக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர் ஆகும்.

மேலும் படிக்க: 15 வயது மூத்த பெண் மீது காதல்.. ஆசைக்கு இணங்க மறுத்ததால் கல்லூரி மாணவர் செய்த கொடூரம்!