Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.9 கோடியாக உயர்ந்த சொத்து மதிப்பு…ஐடி நிபுணரின் இமாலய சாதனை!

I T Expert Techie Assets : இந்தியாவில் ஐடி நிபுணர் ஒருவரின் சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ. 9 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த சொத்து மதிப்பு எப்படி உயர்ந்தது என்பதை ஐடி நிபுணரான டெக்கீ விவரித்துள்ளார் .

ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.9 கோடியாக உயர்ந்த சொத்து மதிப்பு…ஐடி நிபுணரின் இமாலய சாதனை!
ஐடி நிபுணரின் சொத்து மதிப்பு உயர்வு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 12 Jan 2026 15:23 PM IST

இந்தியாவில் ஐடி நிபுணரான டெக்கீ என்பவர் ரெடிட்டில் நீண்ட கால முதலீடு காரணமாக ரூ. 9 கோடி நிகர மதிப்பை அதிகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். இதில், 47 வயதான தொழில்நுட்பத் துறையில் ஊழியராக பணிபுரிந்து வரும் அவர், நிதியின் தொடக்கமோ அல்லது எதிர்பாராத லாபமோ இல்லாமல், ரெடிட் பதிவின் அடிப்படையில், கடந்த 2005- ஆம் ஆண்டு வரும் ரூ. 3 லட்சம் சம்பளத்துடன் தனது வாழ்க்கையை தொடங்கினார். இவருக்கு வெளிநாட்டு பணி, டாலர் வருமானம், பங்கு முதலீடுகள் ஏதும் இல்லாத நிலையில், அவர் தனது சொத்தை அதிகப்படுத்தி உள்ளார். பங்கு முதலீட்டில் அவர் தனது ஆரம்ப காலம் முதல் நிலையான கவனம் செலுத்தியது இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார். காலப்போக்கில் அவரது நிதி வளர்ச்சிக்கு தூய கூட்டு தொகை மற்றும் சந்தையில் முதலீடு செய்யப்பட்டது ஒரு காரணம் என தெரிவித்தார்.

முதலீட்டு தொகுப்பு சீராக வளர்ப்பு

ஆரம்ப காலகட்டத்தில் பெரிய அளவில் அவர் சம்பாதிக்கவில்லை என்றாலும், தனது முதலீட்டு தொகுப்பை சீராக வளர்த்துக் கொண்டார். ஆடம்பரமான முதலீடுகளை தவிர்த்து, கூட்டு வருமானத்தின் சக்தியை அவர் நம்பி இருந்தார். கடந்த 2010- ஆம் ஆண்டில் அவரது வருமானம் ரூ. 10 லட்சமாக அதிகரித்தது. மேலும், அவரது முதலீட்டு தொகுப்பும் அதே அளவுக்கு வளர்ந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டில் ரூ.25 லட்சம் சம்பளத்துடன், அவரது முதலீட்டு தொகுப்பு ரூ.1 கோடியே தாண்டியது.

மேலும் படிக்க: வெனிசுலாவின் காபந்து அதிபர் நான் தான்.. டிரம்ப் பகிர்ந்த புகைப்படத்தால் பரபரப்பு!

ரூ.9 கோடியாக அதிகரித்த நிகர மதிப்பு

கடந்த 2020- ஆம் ஆண்டு தோறும் ரூ.35 லட்சம் சம்பாதித்த அவரது முதலீடுகள் இரட்டிப்பாகி ரூ.2 கோடியாக உயர்ந்தது. தற்போது, ஆண்டுக்கு ரூ.65 லட்சம் சம்பளத்துடன், அவரது நிகர மதிப்பு ரூ.9 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது, அவரது போர்ட்ஃபோலியோவில் முதன்மையாக ரூ.8 கோடி இந்திய பங்குகள் மற்றும் பங்குச் சந்தைகளிலும் ரூ. 1 கொடி மியூச்சுவல் பண்டுகளிலும், ஒரு சொந்த பிளாட்டிலும் அவர் முதலீடு செய்துள்ளார்.

சாதாரணமாக வாழ்ந்து வரும் ஐடி நிபுணர்

அவர் ஒருபோதும் இ எஸ் ஓ பிகள், பரம்பரை சொத்துக்கள், வெளிநாட்டு வருவாய்கள் அல்லது தனது வீட்டை தாண்டி ரியல் எஸ்டேட் ஆகியவற்றின் மீது முதலீடு செய்யவில்லை. 5 பேர் கொண்ட குடும்பத்தை ஆதரிக்கும் ஒரு தனி நபராக அவர் சாதாரணமாக வாழ்ந்து வருகிறார். இது மற்ற ஐடி நிபுணர்கள் மற்றும் ஐடி ஊழியர்களின் முன்மாதிரியாக அமைந்துள்ளது. இதே போல, மற்ற ஊழியர்களும் முன்னேறுவதற்கு ஒரு அடிப்படை காரணியாகவும் அமைந்துள்ளது.

மேலும் படிக்க: 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான குஷான பேரரசு நாணயம்…இரு உருவங்கள்…பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு!