வீட்டுக் கடன் அடைத்து முடிக்கும்போது கையில் பணம் இருக்க வேண்டுமா?.. இந்த ஒரு டிரிக்ஸ் ஃபாலோ பண்ணா போதும்!
Clear Home Loan with Hand Full Of Money | பெரும்பாலான நபர்கள் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி அதனை அடைப்பதிலே தங்களது காலத்தை கழிப்பர். இந்த நிலையில், வீட்டுக் கடனை அடைக்கும்போது கையில் பண இருப்பதை உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்பது தான் பெரும்பாலான பொதுமக்களின் கனவாகவும், ஆசையாகவும் இருக்கும். ஆனால், சொந்த வீடு வாங்குவதோ அல்லது கட்டுவதோ அவ்வளவு சுலபமானது அல்ல. காரணம் அதற்கு அதிகமாக செலவாகும். ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் குறைந்தது ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை செலவாகும். இந்த நிலையில், சாமானிய மக்கள் தங்களது சொந்த வீடு கனவை நிறைவேற்ற வங்கிகளில் கடன் வாங்கி வீடு தங்களது சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்வர். இந்த நிலையில், இந்த டிரிக்ஸை தெரிந்துக்கொள்வதன் மூலம் வீட்டுக் கடனை (Home Loan) திருப்பி செலுத்தும்போது பெருமளவு பணத்தை சேமிக்க முடியும். அது என்ன டிரிக்ஸ் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வீட்டுக் கடனில் இருக்க கூடிய சிக்கல்
பெரும்பாலான நபர்கள் தங்களது சொந்த வீடு கனவை நிறைவேற்றுவதற்காக வங்கிகளின் கடன் வாங்குகின்றனர். ஆனால், அவ்வாறு வங்கிகளிl கடன் வாங்குவதன் மூலம் அந்த கடனை திருப்பி செலுத்தும்போது அதிகப்படியான வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சிலர் தங்களது காலம் முழுவதும் அந்த கடனை அடைப்பதிலேயே கழித்துவிடுவர். இந்த நிலையில், ஒரு டிரிக்ஸை பின்பற்றும் பட்சத்தில் உங்களாள் உங்கள் வீட்டு கடனை திருப்பி செலுத்தும்போது பல லட்சங்களை சேமிக்க முடியும்.
இதையும் படிங்க : Gold : தொடர் உயர்வை சந்திக்கும் தங்கம்.. ஒரே நாளில் ரூ.5,000 உயர்ந்த வெள்ளி!
வீட்டுக் கடனில் பல லட்சங்களை சேமிக்கலாம்
வீட்டுக் கடனில் பலரும் செய்யக்கூடிய ஒரு தவறு என்றால், அதனை திருப்பி செலுத்தும் காலத்தை மிக அதிகமானதாக தேர்வு செய்வது தான். அதாவது, நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை மிக நீண்டதாக வைத்திருந்தால் நீங்கள் அதிகப்படியான வட்டியை செலுத்த நேரிடும். இதுவே நீங்கள் பணத்தை திருப்பி செலுத்தும் காலம் குறைவானதாக இருந்தால் நீங்கள் மிக குறைவான அளவு வட்டியை செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.
வீட்டுக் கடனுடன் எஸ்பிஐ தொடங்குங்கள்
வீட்டுக் கடனுடன் ஒரு எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan) தொடங்குவது வீட்டு கடனை லாபகரமாக அடைக்க உதவும் சிறந்த வழியாக இருக்கும். உதாரணமான ஒருவர் ரூ.30 லட்சத்திற்கு கடன் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அதனை 20 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிலையில், 9.55 சதவீத அடிப்படையில் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.28,062 மாத தவணை செலுத்த வேண்டும். அப்போது அவர் 20 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.67.34 லட்சம் செலுத்தியிருப்பார்.
இதையும் படிங்க : இந்த ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 கிடைக்காது.. எந்த எந்த அட்டைகள்!
இதுவே அவர் மாத தவணை தொகையில் இருந்து 25 சதவீத பணத்தை, அதாவது ரூ.7,015 மாதம்தோறும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் (Equity Mutual Fund) முதலீடு செய்து வந்தால் அவருக்கு 20 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 20 சதவீதம் லாபம் கிடைக்கும். அதன்படி ஆந்த நபருக்கு மொத்தமாக ரூ.64 லட்சம் கிடைக்கும். எனவே கடனை அடைக்கும்போது அந்த நபருக்கு ரூ.64 லட்சம் கையில் இருக்கும்.