AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீரிணையை கடக்கும் கப்பல்களை தாக்குவோம்.. ஈரான் பரபரப்பு அறிவிப்பு!

Iran Closed Strait Of Hormuz | ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், சர்வதேச எண்ணெய் கப்பல் போக்குவரத்து நீர்வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நீரிணையை கடக்கும் கப்பல்களை தாக்குவோம்.. ஈரான் பரபரப்பு அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Mar 2026 12:09 PM IST

டெஹ்ரான், மார்ச் 03 : அமெரிக்கா (America), இஸ்ரேல் (Israel) மற்றும் ஈரான் (Iran) இடையே நீடித்து வரும் போர் காரணமாக சர்வதேச எண்ணெய் கப்பல் போக்குவரத்து நீர்வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் மீது போர் தொடுத்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது கூட்டாக தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக கடும் கோபத்தில் உள்ள ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டுமன்றி, துபாய், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிங்க : Khamenei : இறுதி மூச்சு வரை சவால்.. யார் இந்த அலி கமேனி? ஈரான் உச்சதலைவரின் வரலாறு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராக உள்ள நிலையில், அமெரிக்கவும், இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் புவிசார் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான், ஈரான் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சர்வதேச எண்ணெய் கப்பல் போக்குவரத்து நீர்வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மரணத்தை உறுதி செய்த ஈரான் ஊடகங்கள்!

நீரிணையை கடக்க முயற்சி செய்யும் எந்த ஒரு கப்பலையும் தாக்குவோம்

இந்த நீரிணையை கடக்க முயற்சி செய்யும் எந்த ஒரு கப்பலையும் தாக்குவோம். ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற ஈரான் அனுமதிக்காது என்றும் எரிவாயு மற்றும் எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் இணைப்புகளும் தாக்கப்படலாம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக உலக எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us