AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கத்தின் தரத்தை ஒரே ஒரு செயலி மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.. எப்படி தெரியுமா?

Find The Quality Of Gold With App | தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவில் உள்ள நிலையில், போலி தங்கம் சந்தையில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், போலி தங்கத்தை வெறும் ஒரு செயலி மூலம் கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கத்தின் தரத்தை ஒரே ஒரு செயலி மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.. எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Mar 2026 16:35 PM IST

புவிசார் பதற்றங்கள் காரணமாக உலக முதலீட்டாளர்கள் அதிக அளவு தங்கத்தில் முதலீடு செய்வது, தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருவது தங்கம் சாமானியர்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ள அதே வேளையில், சந்தையில் போலி தங்கத்தின் வரவு அதிகரித்துவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், போலி தங்கத்தை செயலி மூலம் கண்டறிவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

போலி தங்கமா? – மொபைல் ஆப் மூலமே சுலபமாக கண்டுபிடிக்கலாம்

இந்தியாவை பொருத்தவரை தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாக உள்ளது. தங்கம் மட்டுமன்றி வெள்ளி நகைகளுக்கும் இது கட்டாயமாக உள்ளது. அந்த தங்க நகை தூய்மையானதா, அதில் எத்தனை சதவீதம் தங்கம் உள்ளது, அதன் தரம் சிறப்பாக உள்ளதா என்பதை ஆராய்ந்து வழங்கப்படுவதுதான் இந்த பிஐஎஸ் முத்திரை. நகை வாங்கும்போது போலி தங்கத்தை வாங்கி பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க அரசு இந்த முறையை கையாண்டு வருகிறது.

இதையும் படிங்க : பிபிஎஃப் கணக்கு தொடங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க!

இந்த நிலையில், போலி தங்கத்தை வாங்கி ஏமாறாமல் தூய்மையான தங்கத்தை வாங்க மேலும் ஒரு சிறந்த வழி உள்ளது. அதுதான் பிஐஎஸ் கேர் என்ற செயலி. நீங்கள் தங்கம் வாங்க நகை கடைக்கு செல்வதற்கு முன்னதாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த செயலியில் லாக் இன் செய்த பிறகு நீங்கள் வாங்கும் தங்க நகையில் இருக்கக்கூடிய HUID எண், அதாவது ஆறு இலக்கம் கொண்ட எண்களும், எழுத்துக்களும் கலந்த ஒரு குறியீடு இருக்கும்.

தங்கத்தின் தரத்தை செயலியில் சரிபார்ப்பது எப்படி?

  1. பிஐஎஸ் கேர் செயலியில் உள்ள Verify HUID என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  2. பிறகு உங்கள் நகையில் இருக்கும் HUID எண்ணை உள்ளிட வேண்டும்.
  3. HUID எண்ணை உள்ளிட்டதுமே அது தொடர்பான தகவல்கள் உங்களுக்கு கிடைத்துவிடும்.

இதையும் படிங்க : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனிமேல் யுடிஎஸ் செயலி இல்லை.. ரயில் ஒன் செயலி தான்.. இன்று முதல் புதிய நடைமுறை!

உதாரணமாக அந்த நகை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம், எந்த மையத்தில் நகை ஹால்மார்க் செய்யப்பட்டது, எந்த வகையான நகை, எந்த தேதியில் ஹால்மார்க் செய்யப்பட்டது என்பது குறித்த அனைத்து தகவல்களும் தெரிய வந்துவிடும். இதன் மூலம் போலி தங்கத்தை வாங்கி நீங்கள் ஏமாராமல் இருக்க முடியும்.

Follow Us