AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை ரிப்போர்ட்

நவம்பர் 7ஆம் தேதியைப் பொறுத்தவரையில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை ரிப்போர்ட்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Nov 2026 06:25 AM IST

நவம்பர் 6, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தற்போது தென் மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. இதற்கிடையே, நவம்பர் 6 முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளான நவம்பர் 8ஆம் தேதியும் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 6: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நவம்பர் 6ஆம் தேதியான இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சார் பதிவாளர் நில ஆவண முறைகேடு வழக்கு.. திருவாரூரில் முக்கிய குற்றவாளி கைது.. சிபிசிஐடி நடவடிக்கை!

அதேபோல், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 7: மஞ்சள் எச்சரிக்கை

நவம்பர் 7ஆம் தேதியைப் பொறுத்தவரையில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8: தீபாவளி அன்று கனமழைக்கு வாய்ப்பு

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நவம்பர் 8ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஜெகன்மோகன் ரெட்டி இல்ல திருமண விழா.. ஒரே மேடையில் CM விஜய்- நடிகை த்ரிஷா.. மணமக்களுடன் போஸ்!

அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 9: டெல்டா மாவட்டங்களில் கனமழை

நவம்பர் 9ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நவம்பர் 11ஆம் தேதி தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Follow Us