Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 கிடைக்காது.. எந்த எந்த அட்டைகள்!

Pongal Gift 3000 Rupees | 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.3,000 பணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் சில ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு வழங்கப்படாது என்று அரசு கூறியுள்ளது.

இந்த ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 கிடைக்காது.. எந்த எந்த அட்டைகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Jan 2026 16:04 PM IST

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது 2026 ஆம் ஆண்டுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பில் அரசு ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தியுள்ளது. அதாவது சில ரேஷன் அட்டை (Ration Card) தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படாது என்று கூறியுள்ளது. இந்த நிலையில், யார் யாருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீடு தேடி விநியோகம் செய்யப்பட உள்ள டோக்கன்கள்

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதலே ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் பரிசு பணமும் வழங்கப்பட்டு வருகிறது. 2022, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், 2025 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு பரிசு வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர். தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொங்கல் பரிசு கிடைக்குமா என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

இதையும் படிங்க : 2026-ல் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள்.. முக்கிய டிப்ஸ்!

இந்த நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ.3,000 பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசுத்தொகை வழங்க பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன்கள் வழங்கப்படும் என்றும், அந்த டோக்கன்களின் அந்த நபர்கள் எப்போது சென்று பொருட்களை வாங்க முடியும் என்பது தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும் என்றும் அதன் அடிப்படையில் பொதுமக்கள் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு வழங்கப்படாது?

பொங்கல் பரிசு குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மறுறும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் தற்போது 5 வகையான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.

அட்டை வகை  பரிசு
முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) உண்டு
முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா (PHH – AYY) உண்டு
முன்னுரிமை அற்ற குடும்ப அட்டை (NPHH) உண்டு
சர்க்கரை அட்டை (NPHH -S) இல்லை
பொருட்கள் இல்லாத அட்டை (NPHH – NC) இல்லை

இதையும் படிங்க : தங்கம் Vs வெள்ளி Vs பங்குச்சந்தை.. 2026-ல் எது சிறந்த லாபத்தை கொடுக்கும்.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!

சர்க்கரை அட்டை, பொருட்கள் இல்லாத அட்டைகளுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசு வழங்கப்படாது என்பதை அரசு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.