Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : ஒரே நாளில் சரசரவென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.. ரூ.3,360 குறைந்த தங்கம்!

Gold and Silver Faced Huge Price Drop | தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை அடைந்து வந்த நிலையில், இன்று (டிசம்பர் 30, 2025) தங்கம், வெள்ளி இரண்டுமே மிக கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது.

Gold Price : ஒரே நாளில் சரசரவென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.. ரூ.3,360 குறைந்த தங்கம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Dec 2025 10:43 AM IST

டிசம்பர் 30, 2025 : கடந்த சில நாட்களாக உலக அளவில் தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) போட்டி போட்டுக்கொண்டு விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று (டிசம்பர் 30, 2025) அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சில நாட்களிலேயே உச்சத்தை தொட்ட தங்கம் விலை

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக வேகமாக விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்த தங்கம் புதிய உச்சமாக ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக டிசம்பர் 27, 2025 அன்று வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் ஒரு கிராம் ரூ.13,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : New Year 2026 : 8வது ஊதிய குழு முதல் CNG விலை குறைப்பு வரை.. 2026-ல் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்!

இவ்வாறு மிக கடுமையான விலை உயர்வை தங்கம் எட்டிய நிலையில், அது சாமானியர்களுக்கு எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற சூழல் உருவானது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி அதிரடியாக விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஒரே நாளில் சரசரவென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி

நேற்று (டிசம்பர் 29, 2025) ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.13,020-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 30, 2025) கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : டிசம்பர் 31-ல் கிக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. அமேசான், ஸ்விக்கி உள்ளிட்ட ஊழியர்கள் எடுத்த முக்கிய முடிவு!

இதேபோல வெள்ளியில் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. அதாவது வெள்ளி கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.258-க்கும், ஒரு கிலோ ரூ.2,58,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.