ஆஸ்திரேலியாவில் இருந்து சமீபத்தில் பஞ்சாபுக்கு திரும்பிய என்.ஆர்.ஐ ஹர்ஜிந்த் கௌர், சாதாரண கார் பயணத்தின் போது அபார தைரியம் காட்டி இரு கொள்ளையர்களை விரட்டிய சம்பவம் வைரலாகியுள்ளது. லூதியானாவுக்கு உறவினர் வீட்டிற்கு மாமியார் மற்றும் அத்தை உடன் காரில் சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தொடர்ந்து பின்தொடர்ந்ததாக அவர் கூறினார்.