மெக்சிகோவின் குவாடலஹாரா நகரில் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் தலைவரான நெமேசியோ ரூபென் ஒசேகுவேரா செர்வாண்டஸ் எனப்படும் “எல் மேன்சோ” ராணுவ நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பரவலான வன்முறை வெடித்தது. ஞாயிற்றுக்கிழமை ஜாலிஸ்கோ மாநிலத்தின் டபல்பா பகுதியில் அவரை கைது செய்ய மேற்கொண்ட நடவடிக்கையில் அவர் காயமடைந்தார். பின்னர் மெக்சிகோ நகருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், இருவர் கைது செய்யப்பட்டனர். ஆயுத வாகனங்கள், ராக்கெட் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.