Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Aadhaar Card : 2026 முதல் ஆதாரில் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. என்ன என்ன?

Aadhaar Card New Rules For 2026 | ஆதாரில் அவ்வப்போது சில புதிய விதிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், 2026 முதல் ஆதாரில் சில புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.

Aadhaar Card : 2026 முதல் ஆதாரில் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Dec 2025 11:55 AM IST

இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது தான் ஆதார் கார்டு (Aadhaar Card). அரசின் சேவைகளை பெற வேண்டு என்றால் ஆதார் கார்டு மிக முக்கியமாக உள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஆதார் கார்டு இல்லை என்றால் பல்வேறு சேவைகளை செய்ய முடியாது என கூறப்படுகிறது. இவ்வாறு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் உள்ள நிலையில், அதில் அவ்வப்போது சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் ஆதாரில் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய விதிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) அறிமுகம் செய்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஆதார் புதிய விதிகள்

2026 ஆம் ஆண்டுக்கான புதிய விதிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இனி ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் புகைப்படத்தை மாற்ற வேண்டும் என்றால் புதிய விதிகளின்படி தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் இந்த ஆவணங்கள் இல்லாமல் உங்கள் ஆதார் விவரங்களை மாற்ற முடியாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தவறுதலாக பெறப்பட்ட ஆதார் எண் மட்டுமே செல்லுபடியாகும் என்றும், மற்றவை தானாகவே ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நபர் ஒரே ஒரு ஆதார் எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : Bank Holiday : 2026, ஜனவரி மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!

தகவல்களை புதுப்பிக்க அடையாள சான்றுகள் முக்கியம்

ஆதார் கார்டு பெறுவதற்கும், அதில் உள்ள தகவல்களை பெறுவதற்கும் அடையாள சான்று, முகவரி சான்று, பிறந்த தேதி சான்று மற்றும் உறவு முறை சான்று ஆகியவை அவசியம் என்று கூறப்படுகிறது. அடையாள சான்றாக பாஸ்போட்ர்ட், பான் கார்டு, இ பான், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்பட அடையாள அட்டை, என்.ஆர்.ஜி.ஏ வேலை அட்டை, ஓய்வூதிய அட்டை, அரசு சுகாதார திட்ட அட்டை, திருநங்கை அடையாள அட்டை ஆகிய ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.