கொச்சி மெட்ரோ ரயில் தூணில் கடந்த 15 நாட்களாக சிக்கித் தவித்த ஒரு பூனை, தீயணைப்புத் துறையினர் மற்றும் விலங்கு ஆர்வலர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பத்திரமாக மீட்கப்பட்டது. கொச்சியின் கலூர் சர்வதேச மைதானம் அருகே உள்ள மெட்ரோ தூண் எண் 556ல் இந்த பூனை சுமார் இரண்டு வாரங்களாக சிக்கியிருந்தது.