ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம் சத்ரூ பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இந்திய ராணுவத்தின் 2 சிறப்பு படை பிரிவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ‘டைசன்’ அபார துணிச்சலை வெளிப்படுத்தியது. குன்றுப் பகுதியில் மறைந்து இருந்த ஜெய்ஷ் இமொஹம்மது தீவிரவாதிகள் பதுங்கியிருந்த மறைவிடத்துக்குள் டைசன் நுழைந்தது. இதனால் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காலில் காயம் ஏற்பட்டபோதும் டைசன் முன்னேறி, படையினருக்கு துல்லியமான இடத்தை கண்டறிய உதவியது. இந்த நடவடிக்கையில் மாநில போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் சிறப்பு படையினர் இணைந்து மூன்று ஜெய்ஷ் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.