New Year 2026 : 8வது ஊதிய குழு முதல் CNG விலை குறைப்பு வரை.. 2026-ல் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்!
Major Changes From 2026 | 2025 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், விரைவில் 2026 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது, இன்னும் ஒருசில நாட்களில் 2026 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு முதல் யுபிஐ (UPI – Unified Payment Interface), கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price) உள்ளிட்டவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 முதல் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்
கடன்களுக்கான வட்டி விகிதம், நிலையான வைப்பு நிதி வட்டி, 8வது ஊதிய குழு, பான் – ஆதார் இணைப்பு ஆகியவை குறித்து சில முக்கிய மாற்றங்கள் 2026 முதல் அமலுக்கு வர உள்ளன.
குறைந்த கடன் மற்றும் எஃப்டி விகிதங்கள்
2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை பலமுறை குறைத்துள்ளது. இதன் காரணமாக 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது வெறும் 5.25 சதவீதமாக உள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளதன் காரணமாக வங்கிகள் தங்களது கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. இதேபோல ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு எதிரொலியாக நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்துள்ளன. எனவே 2026 முதல் கடன் மற்றும் எஃப்டி திட்டங்கள் குறைந்த வட்டியுடன் வழங்கப்படும்.




இதையும் படிங்க : ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்த வெள்ளி.. வரலாறு காணாத உச்சம்.. தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை!
8வது ஊதியக்குழு
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் நபர்கள் பயன்பெறும் வகையில் 8வது ஊதியக்குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் பட்சத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். அதாவது, 2026 முதல் 2027 வரையிலான நிதியாண்டுக்கு சுமார் 20 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை உயர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பான் – ஆதார் இணைப்பு கட்டாயம்
வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் ஆதார் கார்டை (Aadhaar Card) இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அந்த வகையில், பான் – ஆதார் இணைப்பு (PAN – Aadhaar Link) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் மற்றும் ஆதாரை இணைக்க டிசம்பர் 31, 2025 தான் கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் கார்டை இந்த தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் அவர்களது பான் கார்டு 2026 முதல் செயல்படாது என்று கூறப்பட்டுள்ளது.
கிரெடிட் ஸ்கோர் அப்டேட்
வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றால் அதற்கு கிரெடிட் ஸ்கோர் (Credit Score) கட்டாயமாக உள்ளது. போதிய கிரெடிட் ஸ்கோர் இல்லை என்றால் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது, அதிக வட்டியுடன் கடன் வழங்கப்படுவது உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும். இந்த நிலையில், கிரெடிட் ஸ்கோர் விரைவாக அப்டேட் செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, 2026 முதல் வெறும் 15 நாட்களில் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படும்.
சிஎன்ஜி விலை குறையும் வாய்ப்பு
ஒருங்கிணைந்த வர்த்தக கொள்கை மூலம் 2026 முதல் கேஸ் சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, சிஎன்ஜி ஒரு கிலோவுக்கு ரூ.1.25 முதல் ரூ.2.50 வரை குறை வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல, பிஎன்ஜி எஸ்சிஎம்-க்கு ரூ.0.90 முதல் ரூ.1.80 வரை விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Year Ender 2025: அமேசான் முதல் ஃபிளிப்கார்ட் வரை… இ-காமர்ஸ் துறையில் அசூர வளர்ச்சி – காரணம் என்ன?
யுபிஐ பண பரிவர்த்தனை புதிய விதிகள்
சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக யுபிஐ பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. அதாவது சிம் கார்டு சரிப்பார்த்தல் மற்றும் டிஜிட்டல் தரவு சோதனை ஆகியவற்றை கொண்டுவர உள்ளது.
சமூல வலைத்தளங்களுக்கான கட்டுப்பாடு
16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான சில புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. கட்டாய வயது சரிப்பார்த்தல், பெற்றோர் பாதுகாப்பு, ஆபத்தான ஆன்லைன் அம்சங்களுக்கான தடைகள் உள்ளிட்ட முக்கிய சில அம்சங்கள் அலம்படுத்தப்பட உள்ளன.
பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான தடை
முக்கிய மெட்ரோ நகரங்களில் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் தொடர்பான புதிய நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளன. பழைய பெற்றோல் மற்றும் டீசல் கார்கள் காற்று மாசை அதிகரிக்கும் விதமாக உள்ள நிலையில், அது குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த முக்கிய அம்சம் அமலுக்கு வர உள்ளது.
இதையும் படிங்க : January 2026 : கிரெடிட் ஸ்டோர் முதல் ஆதார் – பான் இணைப்பு வரை.. ஜனவரி மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
மேற்குறிப்பிட்டுள்ள இந்த முக்கிய அம்சங்கள் 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.