January 2026 : கிரெடிட் ஸ்டோர் முதல் ஆதார் – பான் இணைப்பு வரை.. ஜனவரி மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
January 2026 Changes | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில், 2026 ஜனவரி மாதத்திலும் கிரெடிட் ஸ்கோர், ஆதார் - பான் இணைப்பு உள்ளிட்ட சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிசம்பர் மாதம் சில நாட்களில் முடிவடைய உள்ளது இன்னும் சில நாட்களில் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. ஜனவரி மாதம் மட்டுமன்றி, 2026 ஆம் ஆண்டும் தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாதம் தொடங்கும்போதும் கேஸ் சிலிண்டர் விலை முதல், ஆதார் கார்டு (Aadhaar Card), ரேஷன் கார்டு (Ration Card), பான் (PAN – Permanent Account Number) ஆகியவற்றில் முக்கிய மாற்றம் ஏற்படும். இந்த நிலையில் 2026, ஜனவரி மாதத்திலும் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், 2026 ஜனவரி மாத மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026, ஜனவரி மாதத்தில் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்
விரைவான கிரெடிட் ஸ்கோட் அப்டேட், கடன்களுக்கு குறைந்த வட்டி, பான் – ஆதார் இணைப்பு கட்டாயம் ஆகியவை அமலுக்கு வர உள்ளன.
கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும். இந்த நிலையில் ஜனவரி, 2026 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விரைவான கிரெடிட் ஸ்கோர் அப்டேட்
முன்பெல்லாம் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) பிரதிபலிக்க 30 முதல் 45 நாட்கள் வரை தேவைப்படும். இதன் காரணமாக பலரும் கடன் வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் தான் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 2026, ஜனவரி மாதம் முதல் 15 நாட்களில் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படும்.
குறைந்த வட்டியுடன் கூடிய கடன்கள்
2025-ல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) பல முறை ரெப்பொ வட்டி (Repo Rate) விகிதத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது வெறும் 5.25 சதவீதமாக உள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
இதையும் படிங்க : தங்க நகை கடனுக்கு செக் வைத்த ஆர்பிஐ.. வங்கிகள் எடுத்த முக்கிய முடிவு!
பான் – ஆதார் இணைப்பு
இந்தியாவில் மிக முக்கிய ஆவணங்களாக உள்ளவை தான் ஆதார் மற்றும் பான் கார்டு. இந்த நிலையில், ஜனவரி முதல் பான் – ஆதார் இணைப்பு கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 31, 2025-க்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
செயலிகளுக்கு சிம் கட்டாயம்
வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram), டெலிகிராம் (Telegram) ஆகிய செயலிகளுக்கு சிம் கார்டு கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது. செயலிகளை வெரிஃபை (Verify) செய்யும் முறை ஜிமெயில் கணக்கு மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது செயலிகளுக்கான வெரிஃபிகேஷனில் சிம் கார்டு கட்டாயமகாக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் ஊதியம்
8வது ஊதிய குழு ஜனவரி 1, 2026 அன்று தொடங்க உள்ளது. இந்த நிலையில், அகவிலைப்படி (DA – Dearness Allowance) உயர்வு குறித்து முக்கிய அறிவிப்புன் வரும் என்றும், அதன் மூலம் அரசு ஊழியர்களின் ஊதியம் உயர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : 2025-ல் 100 சதவீதம் லாபம் தந்த சில்வர் ETF.. சிறந்த வெள்ளி இடிஎஃப்கள் எவை?
கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும் நிலையில், அதன் எதிரொலியாக கேஸ் சிலிண்டர் விலையிலும் (Gas Cylinder Price) மாற்றம் ஏற்படும். 2025, டிசம்பர் மாத தொடக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்த நிலையில், 2026, ஜனவரி தொடக்கத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.