Gold Price | மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்..
கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் ரூ.2,160 வரை உயர்ந்து அதிர்ச்சியடைய செய்துள்ளது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சென்னை, பிப்ரவரி 19: சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, இன்று (பிப்ரவரி 19) மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
3 நாட்களாக விலை குறைந்த தங்கம்:
கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டும் ரூ.2,160 வரை உயர்ந்து அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி, நேற்றைய தினம் (பிப்.18) ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.1,13,840 ஆக இருந்தது. பிப்.17ல் ஒரு சவரன் ரூ.1,14,560ஆக இருந்தது. பிப். 16ல் ஒரு சவரன் ரூ.1,15,520ஆக இருந்தது. இப்படி, படிப்படியாக விலை குறைந்து வந்த தங்கம் மேலும் குறையக்கூடும் என நடுத்தர மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
மீண்டும் உயர்ந்த விலை:
இந்நிலையில், 3 நாட்களுக்கு பின்னர் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.220 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,400ஆகவும், சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,200க்கும் விற்கப்படுகிறது.