முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, “வெளி கிரக வாழ்வினங்கள் உண்மையிலேயே இருக்கலாம்” எனக் கூறி கவனம் ஈர்த்துள்ளார். ஆனால் அவை எங்கே உள்ளன என்பது தெரியாது என்றும், அமெரிக்காவின் ரகசிய விமானப்படை தளம் ‘ஏரியா 51’ல் அவை மறைக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். யூடியூபர் பிரையன் டைலர் கோவனுடன் நடந்த பேட்டியில், “அவை உண்மைதான்; ஆனால் நான் அவற்றைப் பார்த்ததில்லை” எனக் கூறினார். இதேவேளை, அடையாளம் காணப்படாத அசாதாரண வான்வழி நிகழ்வுகள் குறித்து அமெரிக்க அரசு ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. பென்டகன் இதற்காக ‘ஆல் டொமைன் அனோமலி ரெசல்யூஷன் ஆபிஸ்’ அமைப்பை உருவாக்கியுள்ளது.