யோகி பாபுவின் கெணத்த காணோம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா
Kenatha Kanom Movie First Look Poster Out Now: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்ப்போது நாயகனாகவும் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் காமெடியன் நாயகன் என மாறி மாறி நடித்து வரும் நிலையில் தற்போது அவர் நாயகனாக நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களிலும் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தொடர்ந்து இப்படியாக பலப் படங்களில் நடித்து வந்த இவருக்கு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான யோகி படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்த பிறகு இவருக்கு யோகி பாபு என்று பெயர் வந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவரை திரையுலகினரும் மக்களும் யோகி பாபு என்றே அழைத்து வருகின்றனர். தொடர்ந்து காமெடிப் படங்களில் நடித்து தனது டைமிங் காமெடியால் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் யோகி பாபு. காமெடியனாக வலம் வந்தாலும் அவ்வபோது நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
அதன்படி நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இறுதியாக இவர் நாயகனாக நடித்தப் படம் ஜோரா கையத் தட்டுங்க. இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்ந்தது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் யோகி பாபு காமெடியனாக நடித்தப் படங்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.




யோகி பாபுவின் கெணத்த காணோம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா:
அதன்படி நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் கெணத்த காணோம். யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தினை இயக்குநர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கி உள்ளார். இவர் கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த கெணத்த காணோம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் நடிகர் ஆர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… சூர்யாவின் படத்தை இயக்கும் இளம் இயக்குநர்? இணையத்தில் வைரலாகும் தகவல்
நடிகர் ஆர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Delighted to reveal the first look poster of #KenathaKanom ✨
Looks intriguing and promising.Best wishes to the entire team for a big success ❤️@iYogiBabu@LovelynChand@RaichalRabecca#ActorRamakrishnan@sureshsangaiah @Thiyagudop1@PlSubentar@nivaskprasanna@ramar_r… pic.twitter.com/leqOGdQW4b
— Arya (@arya_offl) February 19, 2026
Also Read… தெலுங்கு பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி!