சூர்யாவின் படத்தை இயக்கும் இளம் இயக்குநர்? இணையத்தில் வைரலாகும் தகவல்
Suriyas Next Movie Update: கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது அடுத்தடுத்து 3 படங்கள் உருவாகி வருகின்றது. அதன்படி சூர்யாவின் 45-வது படமான கருப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் சூர்யா 46. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமீபத்திய பேட்டியில் சூர்யா 46 படத்தின் தயாரிப்பாளர் கருப்பு படத்தின் வெளியீட்டிற்கு பிறகே சூர்யா 46 வெளியாகும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது தனது 47-வது படத்திற்காக மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள ஜித்து மாதவன் உடன் கூட்டணி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்து வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




சூர்யாவின் படத்தை இயக்கும் இளம் இயக்குநர்?
நடிகர் சூர்யா நடிப்பில் முன்னதாக வெளியான அயன் படத்தைப் போல ஒரு ஸ்டைலிஷ் மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்ன்மெண்ட் படத்திற்காக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் இணைந்து சூர்யா பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் முதலில் சொல்லப்பட்ட ஸ்கிரிப்ட், அவருக்கு இது மிகவும் பிடித்திருந்தது, ஆனால் தற்போது அதை எடுக்க முடியவில்லை. படம் STR51க்குப் பிறகு சூர்யாவின் படத்தின் பணிகள் தொடங்கும் என்று சினிமா வட்ட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
Also Read… ஹரிஷ் கல்யாணின் தாஷமக்கான் படம் படத்திலிருந்து வெளியானது ராப் பேட்டில் லிரிக்கல் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
BUZZ – #Suriya to collaborate with #AshwathMarimuthu for a stylish mass commercial entertainer 😎🔥 in the vibes of #Ayan, this was the initial script narrated to #SuperstarRajinikanth, who liked it greatly but couldn’t take it up at the moment. The movie will commence after… pic.twitter.com/Ms3LHyOWri
— Movies Singapore (@MoviesSingapore) February 17, 2026
Also Read… ஹேப்பி ராஜ் படத்திலிருந்து ஆடினே இருப்பேன் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது!