AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தெலுங்கு பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி!

Actor Karthi Next Movie With Telugu Director: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெலுங்கு பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி!
நடிகர் கார்த்திImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Feb 2026 12:55 PM IST

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் இரண்டு மகன்கள் தான் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இதில் நடிகர் சூர்யா பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகம் ஆகி முன்னணி நடிகராக வலம் வரும் போது அவரது தம்பி கார்த்தி சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமான பருத்திவீரன் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் கார்த்தி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வா வாத்தியார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து தற்போது சர்தார் 2 மற்றும் மார்ஷல் ஆகியப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பில் தற்போது நடிகர் கார்த்தி பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக தெலுங்கு இயக்குநருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெலுங்கு பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி:

இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி நடிகர் கார்த்தியின் அடுத்த படம் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவாகும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவில் மேட் மற்றும் மேட் 2 ஆகியப் படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் கல்யாண் ஷங்கர் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தற்போது சூர்யா 46 படத்தையும் தயாரித்து வரும் சித்தாரா என்டர்டெயின்மென்ட் கார்த்தியின் அந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும், மார்ஷல் படம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… Ram In Leela Movie: ரியோ ராஜின் பிறந்தநாள்.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘ராம் இன் லீலா’ படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்தது தனுஷ் – வெங்கி அட்லூரி கூட்டணியில் ஹிட் அடித்த வாத்தி படம்!