சிம்புவின் அரசன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை சைத்ரா ஆச்சர்
Chaithra J Achar in Arasan Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தில் நடிகை சைத்ரா ஜே ஆச்சார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கன்னட சினிமாவில் பாடகியாக தனது பணியைத் தொடங்கியவர்தான் சைத்ரா ஆச்சர். அதனைத் தொடர்ந்து பலப் படங்களில் பாடல்கள் பாடிய சைத்ரா ஆச்சர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடிகையாகவும் தனது பணியைத் தொடங்கினார். அதன்படி கன்னட சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான மஹிரா என்ற படத்தின் மூலமாக நடிகையான சைத்ரா ஆச்சர் தொடர்ந்து பலப் படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கன்னட சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் ரக்ஷித் ஷெட்டி நாயகனாக நடித்த சப்த சாகரடாச்சே எல்லோ படத்தில் முக்கிய வேடத்தில் சைத்ரா ஆச்சர் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகை சைத்ரா ஆச்சரின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
கன்னட சினிமாவில் வெளியான இந்தப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை சைத்ரா ஆச்சர். தொடர்ந்து கன்னட சினிமாவில் படங்களில் நடித்து வந்த நடிகை சைத்ரா ஆச்சர் கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான 3BHK படத்தில் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் சைத்ரா ஆச்சர் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மை லார்ட். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை சைத்ரா ஆச்சர் நடித்து இருந்தார். படம் தற்போது வரவேற்பைப் பெற்று வருகின்றது.




சிம்புவின் அரசன் படத்தில் நடிக்கும் நடிகை சைத்ரா ஆச்சர்:
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகை சைத்ரா ஆச்சர் தற்போது நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் உருவாகி வரும் அரசன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… இணையத்தை கலக்கும் அல்லு அர்ஜூன் – லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிவிப்பு வீடியோ… படக்குழு வெளியிட்ட பதிவு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
— #Chaithra J Achar, who acted in 3BHK, is playing an important role in #SilambarasanTR’s film #ARASAN.
— The next schedule of shooting for this film is set to begin next month 🚀 pic.twitter.com/CioSnlaSoP— Movie Tamil (@_MovieTamil) February 19, 2026
Also Read… பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் எப்போது? இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்