Happy Raj: ‘ஆடினே இருப்பேன்’.. ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் முதல் சிங்கிள் இதோ!
Happy Raj Movie First Song: கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தொடர்ந்து, படங்களில் கதாநாயகனாக நடித்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் ஹேப்பி ராஜ் என்ற படமானது ரிலீசிற்கு தயாராகிவரும் நிலையில், இதன் முதல் பாடல் ஆடினே இருப்பேன் தற்போது வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் கடந்த 2023ம் ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar). இவர் சினிமாவில் வெறும் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்திருக்கிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் இவரின் நடிப்பில், கிங்ஸ்டன் (Kingston)மற்றும் பிளாக்மெயில் (Blackmail) என இரு படங்கள் வெளியானது. இப்படங்கள் இரண்டும் எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கவில்லை. இதையடுத்து இவர், லக்கி (Lucky) என்ற ஓடிடி ஸ்பெஷல் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் வரும் 2026 பிப்ரவரி 20ம் தேதியில் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.
மேலும் இவரின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் திரைப்படம்தான் “ஹேப்பி ராஜ்” (Happy Raj) . இதை அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்சியன் (Maria Raja Elanchezian) இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள நிலையில், தற்போது ஹேப்பி ராஜா படத்தின் முதல் பாடல் “ஆடினே இருப்பேன்” (Aadiney irupen)வெளியாகியுள்ளது. பிக்பாஸ் கனா வினோத் நிப்பாடலை பாடியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.




இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் சேயோன் ரிலீஸ் தேதி எப்போது இருக்கும்? பொங்கலில் விட்டதை இப்படத்தின் மூலம் பிடிப்பாரா?
ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடல் குறித்த பதிவு:
#Aadineyirupen OUT NOW!!!😎🕺
Play it once, play it twice
Feel the vibe, that’s the price. 🎧✨🎶 @justin_tunes
🎙️✍️ #GaanaVinoth@jaivarda04 @SureshJaikanth @gvprakash @actorabbas @srigouripriya @maria_raja_elan #GeorgeMaryan @kailasam_geetha… pic.twitter.com/Dw4VRMmQZO— Saregama South (@saregamasouth) February 17, 2026
ஹேப்பி ராஜ் திரைப்படம் எப்போது வெளியாகும்:
இந்த ஹேப்பி ராஜா படமானது ரோம் -காம் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. கிட்டத்தட்ட திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் கதை ஜானரில் இப்படம் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். இவர் தமிழில் லவ்வர் படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்து, தமிழில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் மலையாள சினிமாவில் ஹிட் அடித்த பணி படத்தின் 2-ம் பாகம் எப்போது தொடங்குகிறது? அப்டேட் இதோ
மேலும் இப்படத்தில் நடிகர்கள் ஜார்ஜ் மரியா, அப்பாஸ், ப்ரதானா, மதுரை முத்து போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 3 மாதத்தில் முழுமையாக நிறைவடைந்திருந்தது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இப்படம் இருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.