பூஜையுடன் தொடங்கியது மரகத நாணயம் 2 படம் – வைரலாகும் போட்டோஸ்
Maragatha Naanayam 2 Movie Update: தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மரகத நாணயம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மரகத நாணயம். ஃபேண்டசி காமெடி பாணியில் உருவான இந்த மரகத நாணயம் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஆதி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஆனந்தராஜ், முனிஷ்காந்த், டேனியல் அன்னி போப், மைம் கோபி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், எம்.எஸ்.பாஸ்கர், அருண்ராஜா காமராஜ், சங்கிலி முருகன், கஜராஜ், பிளேட் சங்கர், காளி வெங்கட், பிரம்மானந்தம், சாந்தி மணி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பாக தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.




பூஜையுடன் தொடங்கியது மரகத நாணயம் 2 படம்:
இந்த நிலையில் இன்று மரகத நாணயம் பாகம் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். மேலும் இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ்மற்றும் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் பூஜை படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Dashamakan: ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ பட முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – அறிவிப்பு இதோ!
மரகத நாணயம் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#MaragadhaNaanayam2 Begins with Grand Poojai ❤️✨@aadhiofficial #Sathyaraj @priya_Bshankar @nikkigalrani @Danielanniepope @Arunrajakamaraj #Munishkanth #Anandaraj #Muruganandam@PassionStudios_ @AxessFilm @goodshow_offl @DangalTV @RDCMediaPvtLtd @Sudhans2017 @ActorDev_offl… pic.twitter.com/4O0Z2VoGA2
— Passion Studios (@PassionStudios_) February 16, 2026
Also Read… மீண்டும் சூப்பர் டீலக்ஸ் பட இயக்குநருடன் இணைந்த விஜய் சேதுபதி – ஃபார்ட் லுக் ரிலீஸ் எப்போது?