AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் காதலா? மலையாள சினிமாவில் இந்த அழகான சூஃபியும் சுஜாதாயும் படத்தை பார்க்க தவறாதீர்கள்!

Sufiyum Sujatayum Movie OTT Update: மலையாள சினிமாவில் பல காதல் படங்கள் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அப்படி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் சூஃபியும் சுஜாதாயும். இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் காதலா? மலையாள சினிமாவில் இந்த அழகான சூஃபியும் சுஜாதாயும் படத்தை பார்க்க தவறாதீர்கள்!
சூஃபியும் சுஜாதாயும்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Feb 2026 18:33 PM IST

பான் இந்திய மொழிகளில் காதலைப் போற்றும் விதமாக பல நூறு படங்கள் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து எந்த மொழியில் காதல் படம் வெளியானாலும் அதனை மற்ற மொழிகளில் உள்ள சினிமா ரசிகர்கள் அதனைத் கொண்டாடத் தவறியதில்லை. அதன்படி மலையாள சினிமாவில் கடந்த 03-ம் தேதி ஜூலை மாதம் 2020ம் ஆண்டு வெளியான படம் சூஃபியும் சுஜாதாயும். இந்தப் படம் கொரோனா காலக்கட்டத்தில் உருவானதால் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது. அதன்படி இந்த சூஃபியும் சுஜாதாயும் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. மேலும் இந்த சூஃபியும் சுஜாதாயும் படத்தை இயக்குநர் நரணிபுழா ஷானவாஸ் எழுதி இயக்கி இருந்தார். படம் வெளியான போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயசூர்யா, அதிதி ராவ் ஹைதாரி, தேவ் மோகன், சித்திக், மாமுக்கோயா, ஹரீஷ் கனரன், மதுமோகன் குட்டம்பரம்பத், கலாரெஞ்சினி, வல்சலா மேனன், மணிகண்டன் பட்டாம்பி, சுவாமி சூன்யா, லோகன் பாலன், பிரியா சன்னி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எம். ஜெயசந்திரன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தை ஃப்ரைடே ஃபிலிம் ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் விஜய் பாபு தயாரித்து இருந்தார்.

சூஃபியும் சுஜாதாயும் படத்தின் கதை என்ன?

கேரள-கர்நாடக எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பேச முடியாத சுஜாதா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை அதிதி ராவ் நடித்து இருந்தார். இந்த நிலையில் சுஜாதாவின் கிராமத்திற்கு வரும் ஒரு சூஃபி கதாப்பாத்திரத்தில் நடிகர் தேவ் மோகன்நடித்து இருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்படும் நிலையில் மதம் பிரச்சனை காரணமாக அவர்களின் காதல் பிரிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சுஜாதா ராஜீவ் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ஜெய சூர்யாவிற்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார். மருத்துவராக இருக்கும் ராஜீவ் உடன் திருமணத்திற்கு பிறகு சுஜாதா வெளிநாட்டில் தங்கியிருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் கிராமத்தில் இருந்த சூஃபி தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே உயிரிழந்துவிடுகிறார்.

Also Read… Abhishan Jeevinth: ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை.. மேடையில் நெகிழ்ச்சியாக பேசிய அபிஷன் ஜீவிந்த்!

இந்த செய்தி ராஜிவிற்கு தெரியவர தனது மனைவி சுஜாதாவை கூட்டிக்கொண்டு கிராமத்திற்கு வருகிறார். ஆனால் அவர்கள் வந்து சூஃபியின் முகத்தை பார்ப்பதற்கு முன்னதாகவே இறுதிச் சடங்குகள் முடிந்துவிடுகிறது. ஆனால் சூஃபியின் முகத்தை பார்க்க முடியாமல் சுஜாதா வருத்தத்தில் இருக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இவர்களின் காதல் ஒன்றுசேரவில்லை என்றாலும் கொண்டாடப்படும் விதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… Pookie Movie: யூத் ஜெனரேஷன் காதல் கதையில்.. ‘பூக்கி’ படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

Follow Us