AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pookie Movie: யூத் ஜெனரேஷன் காதல் கதையில்.. ‘பூக்கி’ படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!

Pookie Movie Reviews: நடிகர் விஜய் ஆன்டனியின் தயாரிப்பில் தமிழில் வெளியாகியுள்ள படம்தான் பூக்கி. இப்படத்தில் மார்கன் படத்தில் நடித்த அஜய் திஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இளம் காதலர்களின் காதல் மற்றும் அவர்களின் பிரேக்அப் குறித்த கதைக்களத்தில் இப்படமானது தயாராகியுள்ளது. இந்த திரைப்படத்தின் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

Pookie Movie: யூத் ஜெனரேஷன் காதல் கதையில்.. ‘பூக்கி’ படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
பூக்கி திரைப்பட விமர்சனங்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Feb 2026 14:10 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக கலக்கிவருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவர் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் கடந்த 2025ம் ஆண்டில் மட்டுமே இவரின் நடிப்பில் 2 படங்கள் வெளியாகியிருந்தது. அதில் சக்தித திருமகன் (Sakthi Thirumagan) என்ற படமானது சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த வகையில் இவர் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்துவருகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மார்கன் (Maargan) படத்தில் நெகடிவ் கலந்த வேடத்தில் நடித்த, நடிகர் அஜய் திஷன் (Ajay Dhishan). இவர் விஜய் ஆண்டனியின் உறவினர் ஆவார். இவர் தற்போது படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் அந்த படம்தான் பூக்கி (Pookie). இந்த திரைப்படத்தின் கதையை புதிய பார்தி எழுத, அறிமுக இயக்குநர் கணேஷ் சந்தரா (Ganesh Chandhrra) இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜய் திஷன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை தனுஷா (Dhanusha) நடித்துள்ளார்.

இந்த படமானது இளம் ஜெனரேஷன் காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 2026 பிப்ரவரி 13ம் தேதியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: இதுதான் வெற்றியா என்று அப்பாவிடம் கேட்டேன்… நெகிழ்ந்து பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்

அஜய் திஷனின் பூக்கி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்த பதிவு:

பூக்கி திரைப்படத்தின் கதைக்களம் என்ன :

இந்த போக்கி திரைப்படமானது 6 வருடமாக ஒன்றாக வாழும் காதலர்கள் கைலாஷ் மற்றும் ஆழி ஜோடியை பற்றியது. ஒரு இரவு, அவர்கள் வீட்டிற்கு காரில் செல்லும் போது, ​​ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு, யாரோ ஒருவர் தங்கள் காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைக்கிறார். இது அவர்களுக்கு இடையே ஒரு பெரிய வாக்குவாதத்திற்கு வழிவகுக்கிறது, மேலும் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்யும் வரை விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறுகின்றன. அந்த நேரத்தில், அவர்கள் ஒருவரையொருவர் அறைந்து கொள்கிறார்கள். அருகிலுள்ள ஒருவர் இதை தங்கள் தொலைபேசியில் பதிவு செய்கிறார், மேலும் வீடியோ விரைவாக ஆன்லைனில் வைரலாகிறது.

இதையும் படிங்க: லவ் என்றாலே போராட்டம் தானே.. காதல் குறித்து பிரதீப் ரங்கநாதன் பரபரப்பு பேச்சு!

இதன் பிறகு இவர்களுக்குள் நடக்கும் குழப்பங்கள் மற்றும் அவர்கள் இடையே நடக்கும் மோதல்கள் குறித்த கதையில் தயாராகியுள்ளது. இறுதியில் இவர்கள் இருவருமே சேர்ந்தார்களா அல்லது பிரிந்தார்களா? என்பதே இப்படத்தின் மீதி கதையாகும். இப்படத்தில் இயக்குநரின் கதை சொல்லல் நன்றாக வந்துள்ளது, மேலும் விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் நிலையில் பாடல்களும் ஓரளவே நன்றாகவே வந்துள்ளது. இந்த படமானது காதலர்கள் தினத்தன்று, இளம் காதலர்களுக்கு என்ற திரைப்படமாகும். இப்படத்தை ஜோடியாக இருந்து பார்ப்பது நல்லது. காதல், எமோஷனல் போன்ற கதைக்களத்தை பார்க்க விரும்புபவர்கள் இப்படத்தை நிச்சயமாக திரையரங்குகளில் சென்று பார்க்கலாம்.

Follow Us