கேரியரின் உச்சத்தை விட்டு வந்தாலும்… உதயநிதி பேச்சால் சர்ச்சை – என்ன நடந்தது?
Udhayanidhi Stalin Speech Sparks Controversy: இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் நடித்துள்ள அரிசி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர், அவர் கேரியரின் உச்சத்தை விட்டு வந்தாலும் மக்களோடு மக்களாக இருப்பது தான் அவரது விருப்பம் என்றார்.
சென்னை, பிப்ரவரி 14 : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அரிசி. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 14, 2026 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். துணை முதல்வரானதற்கு பிறகு திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளாத உதயநிதி ஸ்டாலின் தற்போது இந்த விழாவில் கலந்துகொண்டிருப்பது பேசுபொருளாது. முத்தரசன் குறித்து குறிப்பிட்ட உதயநிதி, அவர் கேரியரின் உச்சத்திற்கே போனாலும், அவர் விரும்புவது மக்களோடு இருப்பது தான் என்று பேசினார். தவெக தலைவர் விஜய் கேரியரின் உச்சத்தை விட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக பேசி வரும் நிலையில் தற்போது கேரியரின் உச்சம் என உதயநிதி குறிப்பிட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகராக அறிமுகமாகும் முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரன் அரிசி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 14, 2026 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, அரிசி படக்குழுவை வெகுவாக பாராட்டுகிறேன். காரணம் பொதுவாக திரைப்பட விழாக்களை பெரிய நட்சத்திர விடுதிகளிலோ அல்லது பெரிய திரையரங்குகளிலோ நடத்துவார்கள். ஆனால் அரிசி படக்குழுவினர்,
இதையும் படிக்க : புதுச்சேரியில் தேஜ கூட்டணி 60% வாக்கு வங்கி பெற்று ஆட்சி அமைக்கும்… உள்துறை அமைச்சர் அமித் ஷா!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான முத்தரசன் அரிசி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த விழாவில் கலந்துகொள்வது எனக்கு மிகவும் சந்தோஷம். அரிசி படக்குழுவை நான் வெகுவாக பாராட்டுகின்றேன். ஏனென்றால் இதுபோன்ற பட விழாக்களை படக்குழு ஸ்டார் ஹோட்டலில் அல்லது மிகப்பெரிய திரையரங்கங்களில் தான் நடத்துவார்கள்.
ஆனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தில் நடத்துவது எனக்கு மகிழ்ச்சி. இதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன். கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறை சார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் நான் கலந்துகொள்ளவில்லை. பலர் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தாலும் நான் மறுப்பு தெரிவித்து வந்திருக்கிறேன். ஆனால் அண்ணன் முத்தரசன் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. அவரிடம் கலந்துகொள்வதாக சம்மதம் தெரிவித்தேன் என்றார்.
இதையும் படிக்க : திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் உரிமை.. பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர்!
மேலும் பேசிய அவர், தமிழக அரசு சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்படாத விருதுகளும் சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை வழங்கினோம். நான் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். ஆனால் முத்தரசன் அண்ணன் மக்கள் பணியில் இருந்து சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருந்தாலும், அவர் கேரியரின் உச்சத்துக்கு போனாலும், அவர் விரும்புவது மக்களோடு மக்களாக இருப்பதது தான் என்றார். கேரியரின் உச்சம் என அவர் பயன்படுத்தியது சர்ச்சையாகியிருக்கிறது.



