AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் உரிமை.. பரபரப்பை கிளப்பிய மாணிக்கம் தாகூர்!

Manickam Thakur MP: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் உரிமை என்றும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த தொகுதிகளை தான் காங்கிரஸ் கேட்பதாகவும், இதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 27 Feb 2026 11:25 AM IST
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைத்ததுடன், திமுக தலைவரும், முதல்வருமான மு. க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. ஆனால், இதற்கு பிடி கொடுக்காமல் இருந்து வந்த திமுக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் மு. க. ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

1 / 5
இந்த நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் எனவும், அதில் 150 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக விருதுநகர் காங்கிரஸ் எம். பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. எனவே, தோல்வி அடைந்த தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு விட்டு தர வேண்டும்.

2 / 5
அதிகார பகிர்வு அவசியம். ஆட்சியில் பங்கு கேட்பது எங்களது உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்று காங்கிரஸ் தலைமை அந்த கட்சியினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தலைமை உத்தரவை மீறி மாணிக்கம் தாகூர் எம். பி. சமூக வலைதளங்களில் தனது கருத்தை பதிவிட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

3 / 5
கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 96 இடங்களிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது.அப்போதே, திமுக பெரும்பான்மை பெறாததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி இருக்க வேண்டும். இதே போல தான் கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நமது தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் தவறு என்று மாணிக்கம் தாகூர் எம்பி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

4 / 5
காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று திமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், அந்த கூட்டணியில் தொடர்வதற்கு காங்கிரஸ் கட்சி எதற்காக இவ்வளவு முனைப்பு காட்டி வருகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும், இதில், காங்கிரஸுக்கு கேட்கும் தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு ஆஃபர்களை விஜய் வழங்க தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us