தங்கத்தில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்.. கை நிறைய லாபத்தை அள்ளலாம்.. கோட்டக் செக்யூரிட்டி வெளியிட்ட முக்கிய கணிப்பு!
2026 Second Is The Right Time To Invest In Gold | 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிட்டு பார்க்கையில் தற்போது தங்கம் விலை குறைவாக உள்ளது. இந்த நிலையில், இதுதான் தங்கத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் என்று கோட்டக் செக்யூரிட்டி தெரிவித்துள்ளது.
மாதிரி புகைப்படம்
- தங்கம் விலை பல்வேறு காரணிகளை கொண்டு தீர்மானம் செய்யப்படுகிறது. குறிப்பாக புவிசார் பதற்றம், உலக பொருளாதாரம் ஆகியவை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட முக்கிய காரணிகளாக உள்ளன. இதன் காரணமாக தான் சமீப காலமாக தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
- 2026 ஜனவரி மாதத்தில் ரூ.16,800-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தங்கம் தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக தங்கம் திடீரென பல மடங்கு விலை உயர்வை சந்திக்கிறது என்றால் 30 முதல் 40 சதவீதம் வரை சரிவை சந்திக்கும். அப்படி தான் தற்போதும் தங்கம் விலை சரிந்துள்ளது.
- இவ்வாறு பலமுறை தங்கம் விலை சரிவது நடைபெற்றுள்ளது. ஆனால், ஒவ்வொரு சரிவுக்கு பிறகும் தங்கம் விலை உயர்ந்துள்ளதை முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நிலையில் தான், 2026 இரண்டாம் பகுதியில் தங்கம் விலை குறையும்போது வாங்கி வைத்தால் அதிக லாபத்தை பெற முடியும் என கூறப்படுகிறது.
- கோட்டக் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள கோல்டு அவுட்லுக் அறிக்கையின் படி, 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் பகுதியில் அதாவது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தங்கம் விலை சுமார் 4400 டாலர்களுக்கு மேல் உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே தற்போது தங்கம் விலை குறைவாக இருக்கும்போது முதலீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- அதாவது, தங்கம் விலை 3900 அமெரிக்க டாலர்கள் முதல் 3600 அமெரிக்க டாலர்கள் வரை விற்பனை செய்யும்போது முதலீடு செய்யும் பட்சத்தில், 2027 இரண்டாம் பகுதியில் அதிக லாபம் பெறலாம் என கூறப்படுகிறது. எனவே குறுகிய காலத்தில் முதலீடு செய்து லாபம் பெற நினைக்கும் நபர்கள் இந்த காலக்கட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Follow Us




