AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பூஜையுடன் தொடங்கியது அனிகா சுரேந்தரின் புதிய படத்தின் ஷூட்டிங்!

Anikha Surendrans New Telugu Movie: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் தற்போது புது தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜையடன் தொடங்கியுள்ளது.

பூஜையுடன் தொடங்கியது அனிகா சுரேந்தரின் புதிய படத்தின் ஷூட்டிங்!
அனிகா சுரேந்திரன் புதிய தெலுங்கு படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Jul 2026 14:15 PM IST

தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா சுரேந்திரன் (Anikha Surendran). இவர் தற்போது முன்னணி கதாநாயகியாகவும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நாயகியாக நடித்துவருகிறார். இவரை தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்த முதல் படம்தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (Nilavuku En Mel Ennadi Kobam). கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்குநரும், நடிகருமான தனுஷ் (Dhanush) இயக்க, இளம் தலைமுறையினரின் காதல் கதையை மையமாக கொண்டு வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படத்திற்கு பின் வசந்த் ரவி நடித்திருந்த இந்திரா (Indra) என்ற படத்திலும் முக்கியமான வேடத்தில் இவர் நடித்திருந்தார்.

மேலும் இவர் ஏற்கனவே தெலுங்கில் புட்ட பொம்மை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்த நிலையில், தற்போது 2வது தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, நார்னே நிதின் என்பவர் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று (06/07/2026) தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: ஜன நாயகன் பட ரிலீஸ் இந்த மாதத்தில் இருக்கும் – அப்டேட் கொடுத்த பிரியாமணி!

பூஜையுடன் தொடங்கிய அனிகா சுரேந்தரின் புது தெலுங்கு திரைப்படம்:

இந்த படத்தில் நடிகர் நார்னே நிதின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் மேகா ஷெட்டி என்பவரும் இணைந்து நடிக்கிறார். இதை இயக்குநர் ராதாகிருஷ்ண ரெட்டி இயக்க, ஆஸ்கார் விருதுப் பெற்ற ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் இப்படத்தில் பணியாற்றுகிறார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் விவேக் சிவா இசையமைத்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில், 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: அவரை அந்த நிலையில் என்னால் பார்க்கமுடியாது.. கே பாக்யராஜின் இறுதிச்சடங்கிற்கு வாராத காரணத்தை வெளிப்படையாக சொன்ன ஊர்வசி!

அனிகா சுரேந்தரின் புது படத்தின் ஷூட்டிங் பூஜை குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த படமானது சோஷியல் மீடியா அதிகம் பயன்படுத்தும் காதலர்கள் தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறதாம். இந்த படத்தில் அனிகா சுரேந்திரனும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் நிலையில், அவருக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us