AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

DC Movie: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து வெளியான அப்டேட்!

DC First Single Update: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புது படம்தான் டிசி. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் முதல் பாடல் குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

DC Movie: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து வெளியான அப்டேட்!
டிசி முதல் பாடல் அப்டேட்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 05 Jul 2026 11:26 AM IST

கோலிவுட் சினிமாவில் தான் இயக்கிய சில படங்களின் மூலமாகவே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). கார்த்தியின் (Karthi) கைதி (Kaithi) படத்தை இயக்கி இவர் ஹிட் கொடுத்த நிலையில், இதையடுத்து தொடர்ந்து புது படங்களை கொடுத்து வெற்றிபெற்றிருந்தார். இவரின் இயக்கத்தில் இறுதியாக கூலி (Coolie) என்ற படமானது வெளியானது. ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி நாயகனாக நடித்திருந்த இப்படம், 2025ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் அவர் நடிகராக நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார், அந்த படம்தான் டிசி (DC). இந்த படத்தை தமிழ் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் (Arun Matheswaran) இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துவருகிறது.

இதில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி (Wamiqa Gabbi) நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 31ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் சார் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குவது மிகப்பெரிய பொறுப்பாகும் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

டிசி திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு:

லோகேஷ் கனகராஜின் டிசி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், குறைவான பாடல்களே உருவாகியுள்ளதாம். இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், அதில் “ராகா ஆப் ரிவென்ஜ்” என்ற தீம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது, இப்படத்தி முதல் பாடல் ரிலீஸ் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தத் தேதியும் குறிப்பிடவில்லை.

இதையும் படிங்க: சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் தம்பி!

டிசி படத்துடன் மோதும் சிக்மா :

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் இந்த டிசி படம் உருவாகியுள்ளது. இதில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் 2026ம் ஆண்டு ஜூலை 31ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படம் வெளியாகும் அதே தேதியில் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படமும் வெளியாகிறது. இந்த இரு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸ் மோதல்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us