பெத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு!
Actor Ram Charans Peddi Movie OTT Update | நடிகர் ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் பெத்தி. இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் கடந்த ஜூன் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது பெத்தி படம். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் புஜ்ஜி பாபு சனா எழுதி இயக்கி இருந்தார். தெலுங்கு சினிமாவில் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக புஜ்ஜி பாபு சனா எழுதி இயக்கிய உப்பென்னா படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவதாக இயக்கி உள்ள இந்த பெத்தி படமும் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 2026-ம் ஆண்டில் தென்னிந்திய சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக இந்த பெத்தி படம் மாறியது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து இருந்தார். தொடர்ந்து இந்தி சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்த இவர் தற்போது தென்னிந்திய மொழிகளிலும் அதிக அளவில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




பெத்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு:
தெலுங்கு சினிமாவில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியாகி உலக அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. அதன்படி பெத்தி படம் வருகின்ற 09-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… Nayanthara: அந்த ரெண்டு படமும் ஒரே நேரத்தில் நடிச்சேன் – நயன்தாரா சொன்ன விஷயம்!
பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Aata marocchu kaani, monagadu mathram maradu 😎🔥 pic.twitter.com/zOPAtF6Mdl
— Netflix India South (@Netflix_INSouth) July 4, 2026