40 வருஷத்துக்கு முன்னாடி டெய்லரா வந்தேன்… கருப்பு பட வெற்றிக் குறித்து எமோஷ்னலாக பேசிய நடிகர் இந்திரன்
Actor Indrans | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கருப்பு. இந்தப் படத்தில் தனது கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து நடிகர் இந்திரன்ஸ் மிகவும் நெகிழ்ச்சியாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் அதிக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கருப்பு. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்த கருப்பு படத்தை எழுதி இயக்கி இருந்தார். நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த இந்த கருப்பு படம் திரையரங்குகளில் கடந்த மே மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். அதிலும் குறிப்பாக மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் இந்திரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். அவரது கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் பாராட்டி தள்ளியது குறிப்பிடத்தக்கது.
மேலும் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வரும் நடிகர் இந்திரன்ஸ் தொடர்ந்து பலப் படங்களில் நடித்து வந்தாலும் சமீப காலமாக மட்டுமே இவரது நடிப்பு மக்களிடையே பிரபலமாகி வருகின்றது. மேலும் திரையுலக பிரபலங்களும் இந்திரன் மிகவும் சிறந்த நடிகர். அவர் சினிமாவில் எப்போதோ பெருமையாக கொண்டாட வேண்டியது. ஆனால் கால தாமதமாகவே கொண்டாடப்படுவதாக தெரிவித்தனர். இந்த நிலையில் கருப்பு படத்தின் வெற்றி குறித்து இந்திரன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




கருப்பு பட வெற்றிக் குறித்து எமோஷ்னலாக பேசிய நடிகர் இந்திரன்:
இது எனக்கு ஒரு கனவு போல இருக்கிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, வெறும் ஊசி மற்றும் நூலோடு தமிழகத்திற்கு வந்து தையல்காரராகப் பணியாற்றினேன். இன்று, ஒரு நடிகராக நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஆர்.ஜே. பாலாஜி சார், சூர்யா சார் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது உண்மையிலேயே கருப்புசாமியின் ஆசிர்வாதம் என அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் இந்திரன் பேச்சு:
#Karuppu actor #Indrans got emotional:
This feels like a dream to me.
Around 40 years ago, I came to Tamil Nadu with nothing but a needle and thread, working as a tailor.
Today, you’ve accepted me as an actor. My heartfelt thanks to #RJBalaji sir, #Suriya sir, and everyone who… pic.twitter.com/UspiFG9981
— Movie Tamil (@_MovieTamil) July 3, 2026
Also Read… ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் இதுதானா? வைரலாகும் தகவல்