AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முடிவுக்கு வரும் ஜன நாயகன் சென்சார் பிரச்சனை… ரிலீஸ் எப்போது?

Jananayagan Movie Update | தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி ஒரு படம் இத்தனை ஆண்டுகளில் எந்த படமும் இவ்வளவு பெரிய சிக்கலை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி விஜய் நடிப்பில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி பல சிக்கல்களை சந்தித்து வரும் படம் ஜன நாயகன்.

முடிவுக்கு வரும் ஜன நாயகன் சென்சார் பிரச்சனை… ரிலீஸ் எப்போது?
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jul 2026 10:09 AM IST

தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜய் தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகிறார். தொடர்ந்து சினிமாவில் உச்சத்தில் இருந்த இவர் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ளார். இந்த நிலையில் இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை மொத்தம் 68 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் பெரும்பாலான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று தொடர்ந்து உச்சத்தில் வலம் வந்தார். இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் திரையரங்குகளில் வெளியானது. அந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தனது 69-வது படத்திற்காக இயக்குநர் எச்.வினோத் உடன் கூட்டணி வைத்தார்.

அந்தப் படத்திற்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் கடந்த ஜனவரி மாதமே திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு சென்சார் கிடைக்காத காரணத்தால் படம் வெளியாகவில்லை. தொடர்ந்து தடைப்பட்டுக்கொண்டே வருகின்றது.

முடிவுக்கு வரும் ஜன நாயகன் சென்சார் பிரச்சனை:

ஜனநாயகன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளது. தணிக்கைச் சான்றிதழ் ஒரு வாரத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, படக்குழு இந்தி மற்றும் தெலுங்கு தணிக்கை செயல்முறைகளுக்குச் செல்லும். இப்படம் ஜூலை 16/23 தேதிகளில் வெளியிட இலக்கு வைத்துள்ளது. இருப்பினும், இந்த மாதத்தில் ஏற்கனவே பல குறிப்பிடத்தக்க படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தின் வெளியீடு குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… சூர்யா ரசிகர்களே நீங்கள் நிச்சயமாக பெருமைப்படுவீர்கள் – வைரலாகும் ஜிவி பிரகாஷ் குமார் எக்ஸ் போஸ்ட்

இணையத்தில் வைர்லாஅகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தற்போதைய தமிழ் சினிமாவில் மிகவும் புத்திசாலியான நபர் பிரதீப் ரங்கநாதன் – ஆர்.ஜே.பாலாஜி

Follow Us