AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya48: சூர்யாவிற்கு ஜோடியாகும் கயாடு லோஹர்.. சூர்யா48 பட ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு!

Suriya48 Shooting Pooja: தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவர் தனது 48வது படத்தில் ஜெய்பீம் பட இயக்குநரின் இணைந்துள்ளார். இப்படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Suriya48: சூர்யாவிற்கு ஜோடியாகும் கயாடு லோஹர்.. சூர்யா48 பட ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு!
சூர்யாவின் 48வது படத்தின் படப்பிடிப்பு பூஜைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Jun 2026 21:44 PM IST

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக நடித்துவருபவர் சூர்யா (Suriya). இவரை ரசிகர்கள் தி ஒன் (The One) என்று அன்போடு அழைப்பதுண்டு. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு (Karuppu). இப்படமானது சூர்யாவின் 45வது படமாக வெளியாகியிருந்த நிலையில், பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்ககியிருந்த நிலையில், உலகமெங்கும் சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்படத்திற்கு பின் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons) படத்தில் நடித்துள்ளார். இப்படமும் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாத்தியில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இவர் இணைத்துள்ள புது படம்தான் சூர்யா48 (Suriya48). இப்படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளாராம்.

இவர் ஏற்கனவே சூர்யாவின் ஜெய்பீம் (Jai Bhim) திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில், 2வது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை காந்தாரா படத்தை தயாரித்திருந்த ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜை இன்று (29/06/2026) பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜை புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: நூறு சாமி பட கதையை சசி சார் சொல்லும்போதே அழுதுட்டேன் – விஜய் ஆண்டனி பேச்சு!

சூர்யா மற்றும் டி.ஜே.ஞானவேல் கூட்டணி படமான சூர்யா48 பட ஷூட்டிங் பூஜை குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

சூர்யாவிற்கு ஜோடியாகும் டிராகன் பட நடிகை:

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை தொடர்ந்து சூர்யா இணைந்துள்ள புது திரைப்படம்தான் சூர்யா48. இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கும் ஜோடியாக டிராகன் பட நடிகை கயாடு லோஹர் நடிக்கவுள்ளார்.இந்த ஜோடி முதல் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே சூர்யாவின் கருப்பு படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், 2வது முறையாக சூர்யா48 படத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: என் உயிர் வரை நீடிக்கும் நன்றி.. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!

இந்த படமானது உண்மையான கதையை மையமாக கொண்டு இயக்கப்படுகிறதாம். தமிழில் பிரபலமான ஐந்து ரூபாய் டாக்டரின் கதையை மையமாக கொண்டு இப்படமானது உருவாக்கப்படவுள்ளதாம். ஆனால் இது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுஇல்லை நிலையில், 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us