AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் – ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

GV Prakash Kumar Gives Super Update For Suriya Fans | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்திலிருந்து ஒரு சூப்பர் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் – ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்
விஸ்வநாத் & சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2026 12:07 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இந்த 2026-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக வெளியான கருப்பு படம் தமிழ் நாட்டில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிகழ்ந்து வருகின்றது. மேலும் இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

அந்த வகையில் இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ள இந்த விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தில் இருந்து முன்னதாக பட்டாம்பூச்சி என்ற பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது. அது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்:

இந்த நிலையில் இந்த விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படம் தொடர்பான ஒரு சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அப்டேட் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் நடிகர் சூர்யா ஒரு சூப்பரான டான்ஸ் நம்பர் பாடலை பாடியுள்ளார். அந்தப் பாடலை கென் கருணாஸ் எழுதி உள்ளதாகவும் அந்தப் பதிவில் ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… கோலிவுட் முதல் பாலிவுட் வரை… பாக்யராஜின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Mari Selvaraj: மஞ்சணத்தி படத்தில் எங்க அம்மா இருப்பாங்க.. இயக்குநர் மாரி செல்வராஜ் பகிர்ந்த விஷயம்!

Follow Us