AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்.. திரையுலகில் பெரும் துயரம்

பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், இன்று மாரடைப்பால் காலமானார். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் பணியாற்றிய அவர், பாரதிராஜாவாலேயே நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார்.

திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்.. திரையுலகில் பெரும் துயரம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 27 Jun 2026 10:13 AM IST

ஜூன் 27, 2026: பிரபல நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும், தயாரிப்பாளருமான கே. பாக்யராஜ், இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு, தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.  இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் தனது திரைப்பயணத்தை தொடங்கிய பாக்யராஜ், பின்னர் பாரதிராஜாவாலேயே நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பிறகு தனது தனித்துவமான திரைக்கதைகள், எளிமையான வசனங்கள், குடும்ப பின்னணியிலான கதைகள் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.

திரைக்கதை ஜாம்பவான்:

பொதுவாக பேசப்படாத பல சமூகப் பிரச்சினைகள், குடும்ப உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை தனது திரைப்படங்கள் மூலம் மக்களிடம் எளிமையாக எடுத்துச் சென்ற இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார். நடிகராக மட்டுமல்லாமல், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என திரைப்படத் துறையின் பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் சுயநினைவுடன் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்பட்டது.

மாரடைப்பால் உயிரிழந்த இயக்குனர்-நடிகர் கே. பாக்யராஜ்:

பின்னர் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், வீட்டிற்கு மாற்றப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி வெளியாகியதும் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சோகத்தில் திரையுலகினர்:

கே. பாக்யராஜின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இல்லத்திற்கு திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு பரிமாணங்களில் தனது பங்களிப்பை வழங்கிய கே. பாக்யராஜின் மறைவு, தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது படைப்புகளும், திரைக்கதை சொல்லும் பாணியும் ரசிகர்கள் மத்தியில் என்றும் நினைவுகூரப்படும்.

Follow Us