AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் இணைந்த 96 பிரபல ஜோடி.. வெளியானது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Love And War Movie First Look: தமிழ் சினிமாவில் இயக்குநர் பிரேம் குமாரின் 96 படத்தில் சிறுவயது ராம் மற்றும் ஜானுவாக நடித்து பிரபலமானவர்கள்தான் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி ஜி கிஷன். இவர்கள் இருவரும் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளனர். இதன் முதல் பார்வையை நடிகர் ஜீவா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மீண்டும் இணைந்த 96 பிரபல ஜோடி.. வெளியானது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
லவ் அண்ட் வார் திரைப்படத்தின் முதல் பார்வைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 26 Jun 2026 21:19 PM IST

நடிகர்கள் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) கூட்டணியில், கடந்த 2018ம் ஆண்டில் வெளியான லவ் பீல் குட் படம்தான் 96. இதை இயக்குநர் சி.பிரேம் குமார் (C Prem Kumar) இயக்கியிருந்த நிலையில், எதிர்பாராத வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் போடமாக வெற்றிபெற்றிருந்தது. இப்படத்தில் சிறுவயது ராம் மற்றும் ஜானுவாக நடித்தவர்கள்தான் நடிகர் ஆதித்யா பாஸ்கர் (Aadhitya Baaskar) மற்றும் நடிகை கௌரி ஜி கிஷன் (Gouri G Kishan). இவர்கள் இருவருமே இதில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் 96 திரைப்படத்திற்கு பின் ஹாட் ஸ்பாட் (Hot Spot) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தை அடுத்ததாக தற்போது மூன்றாவதாக ஜோடியாக இணைந்திருக்கும் புது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் ஜீவா (Actor Jiiva) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: குட் டாக்டர் வெப் தொடரின் கதையில் உருவாகிறதா ரஜினியின் தர்மன் திரைப்படம்? அஸ்வத் மாரிமுத்து சொன்ன பதில் என்ன தெரியுமா?

ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் புது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஜீவா:

96 பிரபல ஜோடியாக இணையும் புது படத்திற்கு “லவ் அண்ட் வார்” (Love And War) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படமானது காதல், காமெடி மற்றும் எமோஷனல் போன்ற கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். தற்போது வெளியான போஸ்டரில் ஆதித்யா மற்றும் கௌரி கிஷன் இருவருமே கேக் மீது நிற்பதுபோன்றும், கழுத்தில் மாலை அணிந்து இருப்பதுபோன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யாஷுடன் மோதும் ரவி மோகன்.. கராத்தே பாபு பட ரிலீஸ் எப்போது தெரியுமா?

இப்படமானது விருப்பமில்லை திருமணத்திற்கு பிறகு இருக்கும் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இயக்கப்படுவதுபோல இந்த போஸ்டரை பார்க்கையில் தெரிகிறது.

லவ் அண்ட் வார் படத்தின் இயக்குநர் யார்:

இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கா சாமி இயக்க, ஒரிஜின் ஸ்டூடியோஸ் என்ற புது தயாரிப்பு நிறுவனமானது த்யாரித்துவருகிறது. இதில் ஆதித்யா பாஸ்கர் ஹீரோவாக நடிக்க, கௌரி கிஷன் நாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர் எம் பாக்கியராஜ், ராமச்சந்திரன், பரத் விக்ரம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து பணியாற்றிவருகின்றனர். இப்படத்தின் முதல் பார்வையை ஆர்யா மற்றும் ஜீவா இணைந்து வெளியிட்டிருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகிவருகிறது.

Follow Us