Ravi Mohan: யாஷுடன் மோதும் ரவி மோகன்.. கராத்தே பாபு பட ரிலீஸ் எப்போது தெரியுமா?
Karathey Babu Movie Release Date: நடிகர் ரவி மோகனின் நடிப்பில் புதிதாக தயாராகியுள்ள படம்தான் கராத்தே பாபு. அரசியல் கதைக்களத்தில் தயாராகியுள்ள இப்படத்தை டாடா பட இயக்குநர் இயக்கியுள்ளார். இப்படமானது அரசியல் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், கன்னட நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்துடன் மோதவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குநர் பகிர்ந்துள்ளார்.
தமிழில் ஜெயம் திரைப்படத்தின் (Jeyam) மூலம் ஹீரோவாக அறிமுகம், இன்றுவரையிலும் மக்களின் மனத்தில் நெருக்கமானவராக இருப்பவர் ரவி மோகன் (Ravi Mohan). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இந்த படத்தை சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவரின் நடிப்பில் உருவாகிவந்த அரசியல் திரைப்படம்தான் கராத்தே பாபு (Karathey Babu). இதை டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். இப்படத்தில் ரவி மோகன் “கே ஷண்முக பாபு” என்ற அரசியல்வாதியாக நடித்துள்ளார். இதில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் (Sam CS) இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக அறிமுக நடிகை தாவூதி ஜிவால் நடித்துவருகிறார். தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படம் டாக்ஸிக் படத்துடன் மோதவுள்ளது.




இதையும் படிங்க: குட் டாக்டர் வெப் தொடரின் கதையில் உருவாகிறதா ரஜினியின் தர்மன் திரைப்படம்? அஸ்வத் மாரிமுத்து சொன்ன பதில் என்ன தெரியுமா?
ரவி மோகனின் கராத்தே பாபு பட ரிலீஸ் எப்போது என படக்குழு வெளியிட்ட பதிவு
:
The wait is over, Date for the tiger’s arrival is locked.@iam_ravimohan’s #KaratheyBabu hits screens worldwide on August 28.
Dir by @ganeshkbabu
A @samcsmusic Musical
Produced by @screensceneoffl #SundarArumugam #Shakkthivasu #DaudeeJiwal @ksravikumardir @actornasser… pic.twitter.com/8tb89FhKWM— Screen Scene (@Screensceneoffl) June 26, 2026
இப்படமானது முழுக்க அரசியல் கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக்குவத அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பை இயக்குநர் கணேஷ் கே பாபு அறிவித்துள்ளார்.
டாக்ஸிக் திரைப்படத்துடன் மோதும் கராத்தே பாபு:
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பான் இந்திய படமாக தயாராகியுள்ளதுதான் டாக்ஸிக். இப்படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், ஆகஸ்ட் 26ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதே போல, ரவி மோகனின் கராத்தே பாபு படமும் 2 நாட்களுக்கு பின் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.
இதையும் படிங்க: டோலிவுட் நடிகர் சுஹாஸின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்ட மண்டாடி படக்குழு!
இந்நிலையில் தற்போது தமிழில் இந்த இரு படங்களுக்கு மத்தியில் போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.