கராத்தே பாபு படத்திலிருந்து வெளியானது ராசாதி ராசன் பாடல்
Karathey Babu Movie Raasaadhi Raasaa Lyric Video Out Now | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து. இந்த நிலையில் கராத்தே பாபு படத்தின் பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து பிசியாக நடைப்பெற்று வருகின்றது. இதில் தற்போது நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்களில் வெளியாக உள்ள படம் கராத்தே பாபு. தமிழ் பொலிட்டிகள் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஷண்முக பாபு எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மேலும் நடிகர் ரவி மோகன் இந்தப் படத்தில் அரசியல்வாதியாக நடித்து உள்ளது அவரது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், சக்தி வாசுதேவன், தௌடி எஸ் ஜிவால், நாசர், கே.எஸ். ரவிக்குமார், Vtv கணேஷ், சுப்ரமணியம் சிவா, பிரதீப் ஆண்டனி, கவிதாலயா கிருஷ்ணன், ராஜா ராணி பாண்டியன், கத்தி நரேன், சந்தீப் ராஜ், சிந்துப்ரியா, அரவிந்த், அஜித் கோஷ், கல்கி ராஜா, ஆனந்தி, ஸ்ரீ தன்யா, இளன், வெற்றிவேல், சாம் ஆண்டர்சன், நந்தினி செந்தமிழ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
கராத்தே பாபு படத்திலிருந்து வெளியானது ராசாதி ராசன் பாடல்:
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் இருந்து இன்று ராசாதி ராசன் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த கராத்தே பாபு படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ள நிலையில் பாடலை மீனாட்சி இளையராஜா எழுதிப் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… கமர்ஷியல் ஆக்ஷன் படத்தை இயக்க திட்டமிடும் ஏ.ஆர்.முருகதாஸ்?
கராத்தே பாபு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
“Raasaadhi Raasaa” first single from @iam_ravimohan’s #KaratheyBabu captures the rise of a leader who doesn’t follow the game…
he becomes the game.https://t.co/nmGSaJKzEKDir by @ganeshkbabu
A @samcsmusic Musical
Produced by @screensceneoffl #SundarArumugam #DaudeeJiwal… pic.twitter.com/Ictnt31NfW— Screen Scene (@Screensceneoffl) June 12, 2026
Also Read… Samantha: அதிரடி ஆக்ஷ்ன் நாயகியாக சமந்தா.. எங்கள் தங்கம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது!


