Director Bharathiraja: அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார் இயக்குநர் இமையம் பாரதிராஜா!
Bharathirajas Final Journey: பெருமை மிக்க இயக்குநரான பாரதி ராஜா நேற்று, 2026ம் ஆண்டு ஜூன் 10ம் தேதியில் உடல்நலக்குறைவினால் காலமானார். இவரின் உடல் அவரின் சொந்த ஊரான தேனி மாவட்டம், காட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டில் கொண்டுவரப்பட்டு, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கோலிவுட் சினிமாவில் கிராமியம், பெண்ணியம் சம்பந்தமான திரைப்படங்களை இயக்கி, கிராம மக்களையும் சினிமாவில் ஈர்த்துவந்தவர் இயக்குநர் இமையம் பாரதிராஜா (Director Bharathiraja). இவர் கடந்த சில மாதங்களாக கடும் உடல்நலக்குறைவினால பாதிக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் தெரிவந்த நிலையில், கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 10ம் தேதியில், சென்னை நீலாங்கரையில் (Chennai Neelankarai) உள்ள தனது இல்லத்தில் அதிகாலையில் காலமானார். இவரின் மகனும் நடிகர் மனோஜ் பாரதிராஜா (Manoj Bharathiraja) கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாரடைப்பால் காலமான நிலையில், இதையடுத்து மீளாத்துயரத்தில் பாரதிராஜா இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 10ம் தேதி அதிகாலையில் இறைவனடி சேர்ந்த நிலையில், இவரின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் அவரின் உடலுக்கு மரியாதையை செலுத்தியிருந்தனர்.




இதையும் படிங்க: பாரதிராஜாவின் மறைவு… படங்களில் அப்டேட்டை ஒத்திவைத்த மகுடம், மண்டாட்டி படக்குழுவினர்!
சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டார் இயக்குநர் இமையம் பாரதிராஜா:
சென்னை நீலாங்கரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடல், இன்று 2026ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி அதிகாலையில் தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் சொந்த ஊரான வத்தலகுண்டு மற்றும் கொடைக்கானலில் அருகே உள்ள காட்ரோட்டில் உள்ள அவரின் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க: “என் இனிய தமிழ் மக்களே”.. ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் அரை நூற்றாண்டு கால தமிழ் சினிமாவின் இமயப் பயணம்!!
அங்கும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இங்கும் பல சினிமா பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக வடிவேலு பாரதிராஜாவின் காலில் விழுந்து கதறி அழுது, தனது வருத்தத்தை வெளிக்காட்டியிருந்தார். இந்நிலையில் அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க, உறவினர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட பாரதிராஜா இறுதிச்சடங்கு குறித்த வீடியோ:
The Legend Bharathiraja, the visionary filmmaker who was born in Theni and new path for Tamil cinema, endure forever. pic.twitter.com/ONomTRroGb
— Vignesh Theni (@Vignesh_twitz) June 11, 2026
மாலை 4 மணியளவில் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு தொடங்கப்பட்டநிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் கலந்துகொண்டனர். அங்கு காவல்துறையின் பெண் வாத்திய இசையுடன், 72 குண்டுகள் முழங்க அவரின் உடல், அவரின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சினிமா பிரபலங்களும் இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.