Karathey Babu: ரவி மோகனின் கராத்தே பாபு பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர்!
Raasadhi Raasaa Song Promo: தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் ரவி மோகன். இவரின் நடிப்பில் தமிழில் உருவாகிவரும் அரசியல் திரைப்படம்தான் கராத்தே பாபு. இப்படத்தை டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ள நிலையில், இதன் முதல் பாடல் எப்போது வெளியாகும் என இயக்குநர் அறிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் அரசியல் கதைக்களத்தில் இவர் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் கராத்தே பாபு (Karathey Babu). இப்படத்தை இயக்குநர் கணேசன் கே பாபு (Ganesh K Babu) இயக்கியுள்ளார். இவர் தமிழில் கவினின் டாடா படத்தை ஏற்கனவே இயக்கியிருந்தார். இதையடுத்து இவர் இயக்கியுள்ள 2வது திரைப்படம்தான் கராத்தே பாபு. இப்படத்தில் ரவி மோகன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை தௌதீ ஜிவால் (Daudee Jiwal) ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் இவருக்கு முதல் தமிழ் படம் என்ற நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்திவருகிறது. இப்படத்தில் நடிகர் ரவி மோகன் , “ஷண்முக பாபு” என்ற வேடத்தில் நடித்துள்ளார்.
நடிகை தௌதீ ஜிவால் தமிழக டிஜிபி-யின் மகளும் கூட, இப்படத்திற்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் (Sam C.S) இசையமைத்துள்ள நிலையில், சிறப்பாக பின்னணி இசை மற்றும் பாடல்களும் உருவாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் முதல் பாடலாக “ராசாத்தி ராசா” (Raasadhi Raasaa)உருவாகியுள்ளது. இப்பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு, வரும் 2026ம் ஆண்டு ஜூன் 12ம் தேதியில் வெளியாகும் என இயக்குநர் கணேஷ் கே பாபு அறிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ஒரே படத்தில் மூன்று ரோலில் விஷால்.. அவரே இயக்கிய மகுடம் திரைப்படத்தின் டீசர் இதோ!
கராத்தே பாபு படத்தின் ராசாத்தி ராசா என்ற முதல் பாடல் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Tomorrow…When the music begins, A name will rise, And a legacy will awaken🔥 First single releasing tomorrow🔥@iam_ravimohan @samcsmusic @screensceneoffl @SonyMusicSouth #Karatheybabu #RaasadhiRaasaa pic.twitter.com/K4dDKAOl2M
— ganesh.k.babu (@ganeshkbabu) June 11, 2026
கராத்தே பாபு படத்தின் ரிலீஸ் எப்போது:
நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். இவரின் நாடியில் முழுக்க முழுக்க அரசியல் மற்றும் அதிரடி திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள படம்தான் கராத்தே பாபு. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், சிறப்பாக தயாராகிவந்தது. இப்படத்தில் ரவி மோகனுடன் நடிகர்கள் நாசர், பிரதீப் ஆண்டனி, கே. எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ் மற்றும் கயல் ஆனந்தி போன்ற பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் நடிகர் மணிகண்டனின் புதுப் படத்தின் அப்டேட்
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில், சிறப்பாக பாடல்கள் தயாராகியுள்ளது. இப்படம் அதிரடி அரசியல் கதைக்களத்தில் தயார்க்கியுள்ள நிலையில், எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாகவுள்ளது. அந்தவகையில் இப்படத்தை வரும் 2026ம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.