ரவி மோகன் மீது மீண்டும் குற்றச்சாட்டை வைத்த ஆர்த்தி – என்ன நடந்தது
Aarti recently filed a petition against Ravi Mohan | கடந்த 2024-ம் ஆண்டு முதல் தனது மனைவியை பிரிவதாக ரவி மோகன் தெரிவித்த பிறகு தற்போது விவாகரத்து வழக்கு நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் புதிய பெட்டிஷன் ஒன்றை ரவி மோகனுக்கு எதிராக ஆர்த்தி பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன். இவர் ஜெயம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து மிகவும் மகிழ்ச்சியான ஜோடியாக வலம் வந்த இவர்கள் கடந்த 2024-ம் ஆண்டு தனது மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் இருவரும் பொது வெளியில் பேசக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படி இருக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி தனது மனக் குமுறல்களை கொட்டித் தீர்த்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவரை கண்டித்ததைத் தொடர்ந்து மன்னிப்பும் கோரினார் நடிகர் ரவி மோகன். இப்படி இருக்கும் சூழலில் நடிகர் ரவி மோகன் மீது ஆர்த்தி புதிய புகார் ஒன்றை தற்போது தெரிவித்தது வைரலாகி வருகின்றது.




ரவி மோகன் குழந்தைகளின் பள்ளிக்கட்டணம் கூட செலுத்தவில்லை:
அதன்படி ஆர்த்தி பதிவிட்ட புகார் மனுவில் கூறியதாவது, ஏப்ரல் 2025 முதல் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்கான தொகையை ரவி மோகன் வழங்கவில்லை என்று கூறி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆர்த்தி சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தி தீர்ப்பு வழங்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆர்த்தியின் இடைக்கால பராமரிப்பு மனுவை விசாரித்து, இரண்டு வாரங்களுக்குள் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… Toxic: இயக்குநர் கீது மோகன் தாஸின் பர்த்டே.. ஸ்பெஷல் BTS வீடியோவை வெளியிட்ட டாக்ஸிக் படக்குழு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Aarti recently filed a petition in the Chennai Family Court against #RaviMohan, stating that since April 2025, he hasn’t provided any maintenance funds for the children, including their school fees. She then approached the Chennai High Court seeking a direction to the Chennai… pic.twitter.com/1MYl0Dmvuv
— Movies Singapore (@MoviesSingapore) June 9, 2026
Also Read… Ajith Kumar: என்னால் முடிந்தவரை.. தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்பேன் – அஜித் குமார்!